இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தொடக்க அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் வழக்கமாக "45" என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார். ஆனால் இந்தப் போட்டியில் தனது 301வது ஒருநாள் போட்டியை குறிக்கும் வகையில் "301" என்ற எண் அடங்கிய ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். இதனைக் காணும் போது கெய்ல் தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் என அனைவரும் நினைத்திருந்தனர். மேலும் கிறிஸ் கெய்ல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய போது இந்திய வீரர்கள் பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர். கெய்ல் தான் ஓய்வறைக்கு செல்லும் போது தனது கிரிக்கெட் பேட்டின் நூனிப்பகுதியில் தலைக்கவசத்தை அணிவித்து அனைவரிடமும் காட்டியபடி சென்றார். இப்போட்டி முடிந்த பின்னர் கெய்லிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் ஓய்வு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று பதிலளித்தார்.
மேற்கிந்திய தீவுகளின் டிவிட்டர் பக்கத்தில் 9 நொடிகள் கொண்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் புன்னகை முகத்துடன் கிறிஸ் கெய்ல் கூறியதாவது:
"நான் எனது ஓய்வு பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை." அப்படியென்றால் நீங்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடர்ந்து விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பியபோது கெய்ல் கூறியதாவது: "ஆமாம், நான் என்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடருவேன்." என தனது ஓய்வு முடிவு குறித்து கெய்ல் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முதலில் தெரிவித்திருந்தார் கெய்ல். ஆனால் உலகக்கோப்பை தொடர் முடிவில் தான் இந்தியாவுடனான ஓடிஐ மற்றும் கெய்லின் சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். ஆனால் கிறிஸ் கெய்ல் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இந்தியா உடனான மூன்றாவது ஓடிஐ கெய்லின் பிரியா விடை போட்டியாக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் கெய்ல் அதனை தற்போது மறுத்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி போட்டி முடிவில் கெய்ல் பற்றி தெரிவித்தவதாவது: "கிறிஸ் கெய்லின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். ஒரு சிறந்த மனிதநேயம் கொண்ட மனிதர் என்றே இவரை அழைக்க வேண்டும். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டிற்காக பெரும் பங்களிப்பை கிறிஸ் கெய்ல் அளித்துள்ளார். இதற்காக மீண்டுமொருமுறை என்னுடைய வாழ்த்துகளை தெரவித்துக்கொள்கிறேன். மேற்கிந்திய தீவுகளுக்காக பல சாதனைகளை கிரிக்கெட்டில் படைத்தவர் கிறிஸ் கெய்ல். இந்த நாட்டின் அடையாளமாக இவர் திகழ்கிறார். எனக்கு மிகவும் பிடித்த அதிரடி ஹீட்டர்."
"அனைவருக்குமே இவரது கிரிக்கெட் திறன் குறித்து தெரியும். இந்த இலகிய மனம் கொண்ட மனிதர் பல இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். இவர் அருகில் இருந்தால் எத்தகைய கஷ்டமாக இருந்தாலும் அதனை மறக்கச் செய்துவிடுவார். மிகவும் அதிக நெருக்கடியான சமயங்களிலும் புன்னகை முகத்துடன் இருப்பார். கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வீரர். இவருடன் அதிக நேரங்களை செலவிட்டுள்ளேன், ஒரு சிறந்த மாமனிதர். கெய்லுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியதை நினைத்து பெருமைப் படுகிறேன்."
இந்தியாவுடனான 3வது ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தை காணும்போது கண்டிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடருவார் என தெரிகிறது. இவர் இப்போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசி எவின் லிவிஸுடன் சேர்ந்து 10.2 ஓவருக்கு 115 ரன்கள் பார்டனர் ஷீப் செய்தார். இதனை காணும்போது இவர் மேன்மேலும் சாதனை படைக்க காத்துக்கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. கிறிஸ் கெய்ல் ஒரு முழு உத்வேகத்துடன் விளையாட ஆரமிக்கும் போது எதிரணி பௌலர்களுக்கு பெரும் தலைவலி ஏற்படும்.
"கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லிவிஸ் இந்தப் போட்டியில் விளையாடிய அதிரடியை காணும்போது ஏன் இவர்கள் அதிகம் மதிப்பிடப்பட்ட ஓடிஐ மற்றும் டி20 வீரர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. 20-20 கிரிக்கெட்டில் பௌலர்கள் மற்றும் கேப்டனின் ஃபீல்டிங் கட்டமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே இவர்களை கட்டுபடுத்த இயலும். நாங்கள் இப்போட்டியில் அதனைத்தான் செய்ய முயன்றோம். ஆனால் அவர்கள் இருவரும் முழு உத்வேகத்துடன் செயல்பட்டதால் அவர்களை வீழ்த்தும் வரை பயந்துகொண்டேதான் இருந்தோம்" என இந்திய ஆட்டநாயகன் விராட் கோலி தெரிவித்தார்.
கிறிஸ் கெய்ல் தற்போது மேற்கிந்தியத் தீவுகளின் டாப் ஓடிஐ ரன் குவித்தவராக வலம் வருகிறார். 2020 டி20 உலகக்கோப்பைக்குப் பின் தனது ஓய்வு குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 அன்று தொடங்குகிறது. இதற்கு முன் பயிற்சி ஆட்டம் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற உள்ளது.