இந்தியாவுடனான 3வது ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தை காணும்போது கண்டிப்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடருவார் என தெரிகிறது. இவர் இப்போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசி எவின் லிவிஸுடன் சேர்ந்து 10.2 ஓவருக்கு 115 ரன்கள் பார்டனர் ஷீப் செய்தார். இதனை காணும்போது இவர் மேன்மேலும் சாதனை படைக்க காத்துக்கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. கிறிஸ் கெய்ல் ஒரு முழு உத்வேகத்துடன் விளையாட ஆரமிக்கும் போது எதிரணி பௌலர்களுக்கு பெரும் தலைவலி ஏற்படும்.
"கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லிவிஸ் இந்தப் போட்டியில் விளையாடிய அதிரடியை காணும்போது ஏன் இவர்கள் அதிகம் மதிப்பிடப்பட்ட ஓடிஐ மற்றும் டி20 வீரர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. 20-20 கிரிக்கெட்டில் பௌலர்கள் மற்றும் கேப்டனின் ஃபீல்டிங் கட்டமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே இவர்களை கட்டுபடுத்த இயலும். நாங்கள் இப்போட்டியில் அதனைத்தான் செய்ய முயன்றோம். ஆனால் அவர்கள் இருவரும் முழு உத்வேகத்துடன் செயல்பட்டதால் அவர்களை வீழ்த்தும் வரை பயந்துகொண்டேதான் இருந்தோம்" என இந்திய ஆட்டநாயகன் விராட் கோலி தெரிவித்தார்.
கிறிஸ் கெய்ல் தற்போது மேற்கிந்தியத் தீவுகளின் டாப் ஓடிஐ ரன் குவித்தவராக வலம் வருகிறார். 2020 டி20 உலகக்கோப்பைக்குப் பின் தனது ஓய்வு குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 அன்று தொடங்குகிறது. இதற்கு முன் பயிற்சி ஆட்டம் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற உள்ளது.