உலகக் கோப்பை தொடரில் மற்றொரு ஹாட்ரிக் எடுக்க முயற்சி செய்வேன் - லாசித் மலிங்கா

Lasith malinga
Lasith malinga

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லாசித் மலிங்கா 2019 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பிய லாசித் மலிங்கா இவ்வருட உலகக் கோப்பை தொடரில் மற்றொரு ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த போவதாக தெரிவித்துள்ளார். மிகவும் அனுபவ பந்துவீச்சாளரான இவர் 2007 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 4 பந்துகளுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியின் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்க செய்தார்.

மலிங்கா சமீபத்தில் தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார். 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மலிங்கா-வின் கிரிக்கெட் வாழ்க்கை இறக்கத்தில் இருந்ததது, இருப்பினும் ஆட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு திறமை வாய்ந்தவராக இவர் உள்ளதால் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹீரோவாக திகழ்ந்தார் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் லாசித் மலிங்கா.

ஆட்டத்தின் இறுதிப் பந்தில் 2 ரன்கள் தேவைபட்ட நிலையில் லாசித் மலிங்கா தனது முழு அனுபவத்தினையும் இந்த இடத்தில் செயல்படுத்தினார். மெதுவாக யார்கராக வீசிய பந்து ஷர்துல் தாகூரின் பேட் மீது பட்டது, இதனால் எல்.பி.டபுள்யு விக்கெட் ஆகி மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மலிங்கா தற்போது வரை சிறப்பான டெத் ஓவர் யார்க்கர்களை வீசி வருகிறார். உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியில் ஒரு சிறப்பான வேகப்பந்து வீச்சை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நேர்காணலில் மலிங்கா தெரிவித்துள்ளதாவது,

" நான் ஏன் மற்றொரு ஹாட்ரிக் விக்கெட்டுகளை உலகக் கோப்பை தொடரில் எடுக்கக் கூடாது. கண்டிப்பாக இவ்வருட உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வேன். இது எனக்கு சிறப்பானதாக இருக்கும்.
இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு உள்ள அனைத்து வகை மைதானங்களிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன். ஒரு சிறந்த பௌலரின் ஆட்டத்திறனை கண்டுபிடிக்க இங்கிலாந்து மைதானம் சரியானதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு பௌலர்களுக்கும் சவாலாக இந்த மைதானம் இருக்கும்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு தனது முழு பங்களிப்பை அளித்துள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை அந்த அணிக்காக அளித்துள்ளார். மலிங்கா தனது விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை இன்றளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் மலிங்கா மேலும் கூறியதாவது,

"என்னுடைய சிறப்பான ஆட்டத்திறன் எப்பொழுதும் குறையாது. ஐபிஎல் தொடரில் மீண்டும் எனது ஆட்டத்திறனை வெளிபடுத்த ஒரு வாய்ப்பு கிடைத்து அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இது ஒரு புது நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது. இருப்பினும் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் வெவ்வேறு வகையான கிரிக்கெட் தொடர்களாகும். அத்துடன் ஆடுகள தன்மையும் வேறுபடும். என்னிடம் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளது எனவே என்னுடைய சிறப்பான ஆட்டத்திறன் எப்பொழுதும் வெளிபடும். இது எனக்கு அதிக நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இதற்கிடையில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் லாசித் மலிங்கா பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை தோல்வியை தழுவியது. இந்த போட்டியிலும் மலிங்கா பங்கேற்கவில்லை. கேப்டன் கருடாரத்னே மலிங்காவிற்கு உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டத்திலும் பங்கேற்க உள்ளதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜீன் 1 அன்று கர்டீப் நகரில் உள்ள சோஃபியா கார்டனில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் இலங்கை அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

Quick Links

App download animated image Get the free App now