2019 ஐபிஎல் தொடரில் முதல் லீக் சுற்றுகளில் தொடர் தோல்வியை தவிர்க்கும் எண்ணத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக மேட்ச் 28ல் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் ஏப்ரல் 13 அன்று மோத உள்ளது.
ஒட்டுமொத்த நேருக்கு நேர்: கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 22 நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2018 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெங்களூரு அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 6 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் இரண்டுமே தலா 3 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.
கிங்ஸ் XI பஞ்சாப்
கிங்ஸ் XI பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கீரன் பொல்லார்டின் ருத்ரதாண்டவத்தால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனவே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு பஞ்சாப் மீண்டும் திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், சஃப்ரஸ் கான்
தனது அதிரடி ஆட்டத்திறனை இழந்து தவித்த கே.எல்.ராகுல் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிக்கு எதிராக அரை சதங்களைய விளாசினார். அந்த ஆட்டத்திறனை சற்று மேம்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார். பெங்களூரு அணிக்கு எதிராகவும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த காத்துக் கொண்டுள்ளார்.
கிறிஸ் கெய்லும் கடந்த போட்டியில் 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். சஃப்ரஸ் கான் பஞ்சாப் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, சாம் கர்ரான்
முகமது ஷமி மட்டுமே ரஸலுக்கு கடும் நெருக்கடியை அளிப்பவர். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சீசனில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். முகமது ஷமி மற்றும் அஸ்வின் பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தனது பௌலிங்கில் அளிப்பார் என தெரிகிறது.
சாம் கர்ரான் கடந்த போட்டியில் கடந்த போட்டியில் 54 ரன்களை தனது பௌலிங்கில் அளித்திருந்தார். மொகாலி மைதானத்தில் இவரது பௌலிங் சிறப்பாக எடுபடும் என்பதால் அணியில் தனது இடத்தை சாம் கர்ரான் தக்க வைப்பார் என தெரிகிறது.
உத்தேச XI: கிறிஸ் கெய்ல்,லே.எல்.ராகுல்(கேப்டன்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜியோன், சாம் கர்ரான், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.பங்கேற்ற 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. கிட்டத்தட்ட முதல் லீக் ஐபிஎல் சுற்றுகளில் வைட்-வாஸ் அடையும் நிலையில் பெங்களூரு அணி உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த வருட சீசனில் பெங்களூரு சிறப்பாக விளையாடி உள்ள நிலையில் அந்த நம்பிக்கையுடன் பெங்களூரு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்
விராட் கோலி இந்த சீசனில் 203 ரன்களை விளாசி அணியில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் பார்தீவ் படேல் 173, 172 ஆகிய ரன்களை இந்த சீசனில் குவித்துள்ளனர். பெங்களூரு அணி பெரும்பாலும் இவர்களது பேட்டிங்கையே நம்பி உள்ளது.
மொயன் அலி மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே இன்றைய போட்டியிலும் இந்த ஆட்டத்திறன் தொடரும் என நம்பப்படுகிறது.
பௌலிங்
நட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், டிம் சௌதி, நவ்தீப் சைனி
யுஜ்வேந்திர சகால் இந்த சீசனில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு இவரது பௌலிங் கடும் நெருக்கடியை அளிப்பார் என தெரிகிறது.
டிம் சௌதி கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறவிட்டார். நவ்தீப் சைனி தனது சிறப்பான வேகத்தை கடந்த இரு போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். எனவே பஞ்சாப் அணிக்கு எதிராகவும் இவர்களது ஆட்டம் தொடரும் என நம்பப்படுகிறது.
உத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மொய்ன் அலி, அக்ஸிப் நாத், பவான் நெகி, டிம் சௌதி, நவ்தீப் சைனி, யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ்