நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை ஏப்ரல் 15 அன்று மும்பையில் தேர்வு செய்ய உள்ளதாக பிசிசிஐ உறுதிபட கூறியுள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2019 உலகக் கோப்பை இங்கிலாந்தில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது வலிமையான உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது.
மற்ற உலக கோப்பை கிரிக்கெட் அணிகளும் 15 பேர் கொண்ட வலிமையான கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் நோக்கில் களமிறங்கியுள்ளன. ஏப்ரல் 30-ற்குள் அனைத்து உலகக் கோப்பை கிரிக்கெட் அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி விடுத்துள்ள காலக்கெடுவின் 15 நாட்களுக்கு முன்னாலேயே தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கதைக்கரு
இந்திய அணியில் யாரை தேர்வு செய்வார்கள் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இந்திய தேர்வுக்குழு மீது உள்ளது. இந்திய உலகக் கோப்பை அணி ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு சில இடங்களே நிலுவையில் உள்ளதாகவும் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இந்திய அணியில் மாற்று வீரர்களை கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது: "நாங்கள் உலகக் கோப்பைக்கு தயாராகி விட்டோம் என எனக்கு தெரிகிறது. சில இடங்கள் இந்திய அணியில் இருந்தாலும் அந்த இடத்தை நிரப்ப தகுதியான வீரர்கள் யார் யார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய தேர்வுக்குழு, கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் எக்ஸ்ட்ரா தொடக்க ஆட்டக்காரர்களையோ அல்லது சுழற்பந்து வீச்சாளர்/வேகப்பந்து வீச்சாளர்களையோ அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பார்கள் என நமக்கு தெரியவில்லை.
ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இந்திய அணியின் ஆட்டத்திறனை கண்டு அணியின் கேப்டன் விராட் கோலி சற்று அதிர்ந்துள்ளார். இதைப்பற்றி விராட் கோலி தெரிவித்துள்ளதாவது: அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக உள்ளோம். இருப்பினும் சில சில தவறுகள் இந்திய வீரர்கள் செய்து கொண்டுதான் உள்ளனர். இதனால் கண்டிப்பாக ஒருசில மாற்றங்கள் உலகக் கோப்பை அணியில் எதிர்பார்க்கலாம். உலகக்கோப்பைக்கான இந்திய ஆடும் XI-ஐ நாங்கள் ஏற்கனவே கணித்து வைத்துள்ளோம். நாங்கள் எங்களது தோல்விக்கான காரணத்தை அறிந்து அந்த இடத்தில் எவ்வாறு வலிமையாக்குவது என கற்று வருகிறோம். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவதன் மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங் மேலும் வலுபெறும்"
இந்திய அணியின் கேப்டன் மற்றும் துனைக்கேப்டனின் இந்த கூற்றுப்படி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய இந்திய அணி சற்று மாற்றங்களுடன் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் என தெரிகிறது. நம்பர் 4 பேட்டிங் வரிசை இந்திய அணியில் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே கண்டிப்பாக இந்திய அணியில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
இந்திய கிரிக்கெட் அணி 2019 ஜீன் 5 அன்று தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது.