ஆண்டுதோறும் ஐசிசி சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகளை வழங்குவது வழக்கம். ஐசிசி இன்று 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கின.
இந்த விருதுகளில் ஐசிசியின் ஒருநாள் அணி, டெஸ்ட் அணி, சிறந்த நடுவர் போன்ற பல விருதுகளை வழங்கினர்.
இவற்றில் அனைத்து விருதுகளை பற்றி பார்க்கலாம்.
ஐசிசி ஒருநாள் அணி 2018:
ரோகித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி (கேப்டன்), ஜோ ரூட், ரோஸ் டைலர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், முஸ்டாஃபிசுர் ரஹ்மான், ரஷீத் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீட் பும்ரா.
இந்த அணியில் கோலி தொடர்ந்து மூன்றாவது முறையாக கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார்.
ஐசிசி டெஸ்ட் அணி 2018:
டாம் லாதம், திமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், விராட் கோலி(கேப்டன்), ஹென்ரி நிக்கோல்ஸ், ரிஷ்ப் பண்ட், ஜாசன் ஹோல்டர், முஹம்மது அப்பாஸ், ஜஸ்பிரீட் பும்ரா,காகிசோ ரபடா, நாதன் லியான்.
இந்த ஆண்டிற்கான டெஸ்ட் அணியிலும் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
சிறந்த நடுவர் :
குமார் தர்மசேனா
இந்த விருதை இவர் இரண்டாவது முறையாக பெறுகிறார், 2012 ஆவது வருடம் முதன்முறையாக பெற்றார்.
சிறந்த வளர்ந்து வரும் வீரர் :
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆன பாண்ட் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை பெற்றார்.
ரசிகர்களின் சிறந்த தருணம்:
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தன, இந்த தருணம் சிறந்தது என 48% ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.
சிறந்த T20 ஆட்டம் :
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 172 ரன்களை குவித்ததே இந்த ஆண்டின் சிறந்த ஆட்டத்திற்கான விருதைப் பெற்றது.
ஒருநாள் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரர் 2018 (ஆண்கள்) :
விராட் கோலி, இந்த வருடம் 1202 ரன்களை குவிதுள்ளதன் மூலம் இந்த வருடத்திற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றார். 2018 ஆம் ஆண்டில் இவரது சராசரி 133.55 ஆகும். இதே வருடத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் செய்தார்.
டெஸ்ட் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரர் 2018 (ஆண்கள்) :
விராட் கோலி, இந்த வருடம் 1322 ரன்களை குவிதுள்ளதன் மூலம் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றார். 2018 ஆம் ஆண்டில் இவரது சராசரி 55.08 ஆகும்.
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்:
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் இன்று விருதை பெற்றார் விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் 37 சர்வதேச போட்டிகள், 47 இன்னிங்ஸ்களில் 2735 ரன்களை குவித்துள்ளார் கோலி, இவற்றில் 11 சதமும், 9 அரைசதமும் உள்ளடங்கும். சராசரி 68.37 ஆகும்.
சிறந்த கிரிக்கெட் வீரர்,சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் என மூன்று விருதுகளையும் வென்ற கோலி வரலாற்றில் முதன்முறையாக இந்த சாதனையை படைத்தார்.