2019 உலக கோப்பை தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்த உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. சந்தேகமின்றி, தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இம்முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள மிக இளம் வயதான வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3அவிஸ்கா ஃபெர்னன்டோ:
21 வயதே ஆன பெர்னாண்டோ, இலங்கை வீரர்களிலேயே மிக இளம் வயதில் 2019 உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் தனது பதினெட்டாம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். ஒரு தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியின் மாற்று வீரராக இவர் செயல்பட உள்ளார். இருப்பினும், 19 வயஹிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டு உள்ளமையால் இலங்கை அணி நிர்வாகம், அதை கருத்திற்கொண்டு ஆடும் லெவனில் இவரை இணைக்க செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.சாஹின் அப்ரிடி:
2019 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிக இளம் வீரர் அப்ரிடி. அணியில் உள்ள சக வீரரான முகமது ஹுசைனைன் விட ஒரு நாள் இளையவர் ஆவார். பாகிஸ்தானின் சோயிப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களம் காண்பதற்கு முன்பு தான் இவர்கள் இருவரும் பிறந்தார்கள் என்பது மற்றுமொரு செய்தியாகும். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது கலக்கி வரும் அப்ரிடி 14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை குவித்துள்ளார். மேலும், இவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#1.முஜிப் ரகுமான்:
ஆப்கானிஸ்தான் அணி தற்போது தங்களது இரண்டாவது உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவர், முஜிப் ரகுமான். வெறும் 18 வயதே ஆன இவர், தமது மாய ஜால வித்தையால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்து வருகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களிலும் இடம்பெற்று தொடர்ந்து விளையாடி வருகிறார். இவர் விளையாடிய 29 ஒருநாள் போட்டிகளில் 56 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து சீதோசன நிலைகளுக்கு ஏற்று செயல்படும் இவர், தமது சுழற்பந்து வித்தையால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை.