நடந்தது என்ன ?
2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய தனது முதல் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதிய போது இந்திய அணி விக்கெட் கீப்பர் எம்.எஸ் தோனி தனது கையுரையில் துணை ராணுவத்தின் 'பாலிதான்' முத்திரையை பதித்து இருந்தார். இந்த முத்திரையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது.
உங்களுக்கு தெரியுமா…
உலக கோப்பையின் 8-வது லீக் போட்டியை இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இது இந்திய அணிக்கு உலக கோப்பையில் முதலாவது போட்டியாகும். அதேசமயத்தில் தென்னாப்பிரிக்கா அணி இதற்கு முன் விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் தோல்வியை மட்டும் பெற்றது. முதல் போட்டியை இங்கிலாந்து அணியுடனும் இரண்டாவது போட்டியை பாங்களாதேஷ் அணியுடனும் மோதி தோல்வி அடைந்தது. அதனால் தனது மூன்றாவது போட்டியை வெற்றி பெற வேண்டும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டனர்.
கதைக்கரு
இந்திய அணிக்கு எதிரான 8 லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கிய வேகத்தில் தனது விக்கெட்களை இழந்தனர்.இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை பெற்றது.தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக கிறஸ் மோரில் 42 ரன்களை அடித்துள்ளார்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 47.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 230 ரன்களை அடித்து தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 122 ரன்களை அடித்துள்ளார்.
இப்போட்டியில் இந்திய பவுலிங் செய்த போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான எம்.எஸ் தோனி அணிந்திருந்த கையுரை சர்ச்சைக்கு வித்திட்டது.
அவர் அணிந்திருந்த கையுரையில் இந்தியத் துணை ராணுவத்தின் சிறப்பு படையான ‘பாலிதான்‘ முத்திரையை பதித்து இருந்தார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ எனப்படும். 2011-ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப் பட்டது. மேலும் 2015-ம் ஆண்டு அவர் பாராமிலிட்டரில் பிரிவில் சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டார். இதற்கு டுவிட்டரில் தோனியை பாராட்டி "தோனியின் நாட்டு பற்றுக்கு சல்யூட்” என்று தனது பாராட்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசி - தோனிக்கு வலியுறுத்தல்
ஐசிசி கிரிக்கெட் வாரியம் இந்த முத்திரையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இதற்கு காரணம் ஐசிசி விதிகளின்படி சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் தனது ஆடை மற்றும் கையுரையில் சாதி , மதம் குறிக்கும் எந்தவொரு முத்திரையையும் பயன்படுத்துக்கூடாது என்பதாகும்.
அடுத்து என்ன ?
இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணிக்கு எதாராக ஜுன் 9 ஆம் தேதி, லண்டனில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தோனி அதே கையுரையை பயன்படுத்துவாரா அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பாரா?.