சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் சேம்பியன் ஷீப் என்ற ஒரு தொடரை அறிமுகம் செய்துள்ளது. பரம எதிரிகளாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகஸ்ட் 1 அன்று எட்ஜ்பாஸ்டோனில் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து டெஸ்ட் சேம்பியன்ஷீப் ஆரம்பமாகிறது. இந்த டெஸ்ட் சேம்பியன் ஷீப் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கட்டுப்பாட்டில் ஜீன் 2021 வரை நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்த ஐசிசி இந்த டெஸ்ட் சேம்பியன் ஷீப்-பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இருதரப்பு தொடர் டெஸ்ட் தொடர் முடிவிலும் வெல்லும் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இரு வருடங்களுக்கு பிறகு புள்ளிபட்டியில் முதல் இரு இடங்களில் பிடிக்கும் அணிகளுக்கு இறுதி போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு டெஸ்ட் சேம்பியன் ஷீப் கோப்பை அளிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களை விட டெஸ்ட் தொடர்கள் இனிவரும் காலங்களில் மிகவும் அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள ஒவ்வொரு அணிகளும் ஆகஸ்ட் 2019 முதல் ஜீலை 2021 வரை தலா 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். இதில் 3 டெஸ்ட் தொடர்கள் சொந்த மண்ணிலும் மற்ற 3 டெஸ்ட் தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறும். இதற்கான அட்டவணைகளை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் அந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையை வைத்து வெல்லும் அணிக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதன்மூலம் டெஸ்ட் சேம்பியன் ஷீப் முடிவில் அதிகபட்சமாக 720 புள்ளிகளை வெல்லும் அணி முன்னிலை பெறும். அதிக புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இறுதிப் போட்டி சமனில் முடியுமேயானால், 2019 உலகக்கோப்பை தொடரைப் போன்று ஐசிசி, வெற்றியாளர்ளை தேர்வு செய்ய சில தந்திரமான சூழ்ச்சிகளை கையாளும். ரசிகர்களின் கணிப்புப்படி இறுதிப் போட்டி சமனில் முடிந்தால் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
2019-21 ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷீப் போட்டி அட்டவணை:
இந்தியா
ஜீலை - ஆகஸ்ட் 2019: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
அக்டோபர் - நவம்பர் 2019: இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
நவம்பர் 2019: இந்திய மண்ணில் வங்கதேசத்துடனான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி 2020: நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2020: ஆஸ்திரேலிய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: இந்திய மண்ணில் இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
நியூசிலாந்து
ஜீலை - ஆகஸ்ட் 2019: இலங்கை மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2019 - ஜனவரி 2020: ஆஸ்திரேலிய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி 2020: நியூசிலாந்து மண்ணில் இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஆகஸ்ட் - செப்டம்பர் 2020: வங்கதேச மண்ணில் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
நவம்பர் - டிசம்பர் 2020: நியூசிலாந்து மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2020: நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தானிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
தென்னாப்பிரிக்கா
அக்டோபர் - நவம்பர் 2019: இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2019 - ஜனவரி 2020: தென்னாப்பிரிக்க மண்ணில் இங்கிலாந்திற்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜுலை - ஆகஸ்ட் 2020: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி 2021: தென்னாப்பிரிக்க மண்ணில் இலங்கையுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: பாகிஸ்தான் மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்.
பிப்ரவரி - மார்ச் 2021: தென்னாப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
இங்கிலாந்து
ஜீலை - ஆகஸ்ட் - செப்டம்பர் - 2019: இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியாவுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2019 - ஜனவரி 2020: தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
மார்ச் 2020: இலங்கை மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜீன் - ஜூலை 2020: இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜுலை - ஆகஸ்ட் 2020: இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: இந்திய மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஆஸ்திரேலியா
ஜீலை - ஆகஸ்ட் - செப்டம்பர் - 2019: இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
நவம்பர் 2019: ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2019 - ஜனவரி 2020: ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்துடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி 2020: வங்கதேச மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
நவம்பர் - டிசம்பர் 2020: ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி - மார்ச் 2021: தென்னாப்பிரிக்க மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
இலங்கை
ஜீலை - ஆகஸ்ட் 2019: இலங்கை மண்ணில் நியூசிலாந்துடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
அக்டோபர் 2019: பாகிஸ்தான் மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
மார்ச் - ஏப்ரல் 2020: இலங்கை மண்ணில் இங்கிலாந்துடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜீலை - ஆகஸ்ட் 2020: இலங்கை மண்ணில் வங்கதேசத்துடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி 2021: தென்னாப்பிரிக்க மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி - மார்ச் 2021: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பாகிஸ்தான்
அக்டோபர் 2019: பாகிஸ்தான் மண்ணில் இலங்கைவுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
நவம்பர் - டிசம்பர் 2019: ஆஸ்திரேலிய மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2020: பாகிஸ்தான் மண்ணில் வங்கதேசத்துடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜீலை - ஆகஸ்ட் 2020: இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
டிசம்பர் 2020: நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: பாகிஸ்தான் மண்ணில் தென்னாப்பிரிக்காவுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்.
மேற்கிந்திய தீவுகள்
ஜீலை - ஆகஸ்ட் 2019: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இந்தியாவுடனான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜீன் - ஜூலை 2020: இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜுலை - ஆகஸ்ட் 2020: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
நவம்பர் - டிசம்பர் 2020: நியூசிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: வங்கதேச மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி - மார்ச் 2021: மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
வங்கதேசம்
நவம்பர் 2019: இந்திய மண்ணில் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2020: பாகிஸ்தான் மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
பிப்ரவரி 2020: வங்கதேச மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
ஜீலை - ஆகஸ்ட் 2020: இலங்கை மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஆகஸ்ட் - செப்டம்பர் 2020: வங்கதேச மண்ணில் நியூசிலாந்திற்கு எதிராக இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்
ஜனவரி - பிப்ரவரி 2021: வங்கதேச மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்