ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜேஸன் ஹல்டர்

Jason Holder
Jason Holder

ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த ஜேஸன் ஹல்டர். சமீபத்தில் பார்படாஸில் நடந்த இங்கிலாந்திற்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஜேஸன் ஹல்டர் இரட்டை சதம் விளாசினார். ஆட்டநாயகன் விருதினை வென்று சாதனை படைத்துள்ளார் . ஜேஸன் ஹல்டர் 440 புள்ளிகளை ஆல்ரவுண்டர் பட்டியலில் பெற்று முதலிடம் வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் உள்ள ஷகிப் அல் ஹசன் , ஜேஸன் ஹல்டரை விட 25 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஜேஸன் ஹல்டர் பேட்டிங் இறங்கும் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இவர் ஷேன் டவ்ரிச்-வுடன் சேர்ந்து 295 ரன்களை சேர்த்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

27 வயதுடைய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேஸன் ஹல்டர் தம்முடைய சொந்த மண்ணில் அதிவேக இரட்டை சதத்தை விளாசியுள்ளார். பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு பந்துவீச்சாளராகவும் சரி , பேட்ஸ்மேனாகவும் சரி இவர் தனது பணியை திறம்பட மேற்கொண்டு உள்ளார். அத்துடன் இவரது கேப்டன்ஷிப் கூடுதல் பலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அமைந்தது. ஜேஸன் ஹல்டரின் பேட்டிங் கடைசி 12 -15 மாதங்களாக சிறப்பாக உள்ளது.

ஜேஸன் ஹல்டர் டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இரு இடங்களில் முன்னேறி முதலிடத்தை பிடித்தார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி 33 வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கமின்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த ரோஸ்டன் ஜேஸ் முன்னேற்றம் கண்டுள்ளனர். பேட் கமின்ஸ் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தனது ஒரு இன்னிங்ஸில் சிறந்த டெஸ்ட் விக்கெட்டையும் வீழ்த்தினார். இவர் ஒரு இன்னிங்ஸில் 23 ரன்களை மட்டுமே அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட் கமின்ஸ் தற்போது உலகின் மூன்றாவது பெஸ்ட பௌலர் ஆவார்.

ஷேன் டவ்ரிச் இரண்டாவது இன்னிங்ஸில் 116 ரன்களை அடித்தார். அவர் பேட்டிங் தரவரிசையில் 14 இடங்களில் முன்னேறி 47வது இடத்தை பிடித்தார். ரோஸ்டன் ஜேஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் 14 இடங்களில் முன்னேறி 41 இடத்தை பிடித்துள்ளார். ஹிட்மயர் பேட்டிங் தரவரிசையில் 11 இடங்களில் முன்னேறி 40வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கேமர் ரோஜ் 5 இடங்கள் முன்னேறி 20 இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 1 இடம் முன்னேறி 29வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை டெஸ்ட் போட்டிகளில் 82 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் 17 இடங்கள் முன்னேறி 43 வது இடத்தை டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளார். இலங்கை அணி சார்பில் நிரோஷா திக்வெல்லா முதல் இன்னிங்ஸில் 64 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களை அடித்ததால் 9 இடங்களில் முன்னேறி 39 இடத்தை பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளார். சுரங்கா லக்ம்ல இரு இடங்கள் முன்னேறி 31வது இடத்தை பௌலிங் தரவரிசையில் பிடித்துள்ளார். லஹிரு குமாரா பந்துவீச்சில் ஒரு இடம் முன்னேறி 39 இடத்தை பிடித்துள்ளார்.

App download animated image Get the free App now