ஐசிசி தரவரிசை: நேற்று மாற்றம் கண்ட டெஸ்ட்  தரவரிசையில் இந்தியா தனது முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது 

Indian retain top spot in ICC test ranking
Indian retain top spot in ICC test ranking

நேற்று புதிதாக வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது தொடர்ந்து. மூன்றாவது ஆண்டாக முதலாவது இடத்தில் நீடிக்கிறது, இந்திய அணி. இதற்க்கு அடுத்ததாக நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது. இந்திய அணி 116 புள்ளிகளோடும் நியூசிலாந்து அணி 108 புள்ளிகளோடும் இருக்கின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோற்று மூன்று புள்ளிகளையும், இலங்கை அணிக்கு எதிரான 2-1 என்ற தொடரில் வெற்றி கண்ட போதிலும் மூன்று புள்ளிகளை தற்போது இழந்துள்ளது.

virat kohli with ICC Test mace for Indian cricket team retains No.1 spot in ICC test rankings
virat kohli with ICC Test mace for Indian cricket team retains No.1 spot in ICC test rankings

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரு தோல்விகளை தழுவிய நியூசிலாந்து அணி மூன்று புள்ளிகளை கூடுதலாகப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு மட்டுமே தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இங்கிலாந்து அணி 105 புள்ளிகளோடு நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 98 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது. கடந்த 2015 - 2016 இடைப்பட்ட காலத்தில் ஐந்து தொடர்களில் நான்கு வெற்றிகளை குவித்த இருந்தது, ஆஸ்திரேலிய அணி. எனவே, இதனை தரவரிசையில் கருத்தில் கொள்ளாமல் ஆறு புள்ளிகளை ஆஸ்திரேலியா இழந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஏழாம் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டாம் இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் 2-லிருந்து 11 புள்ளிகளை தற்போது இழந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியதாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றத்தாலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி தனது முதலாம் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக கோப்பை தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறலாம். அதன் பின்னர், நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும்.

virat kohli will lead Indian team in this world cup for the first time
virat kohli will lead Indian team in this world cup for the first time

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதல் 10 இடங்களில் வகிக்கின்றன. மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளை தொடர்ந்து நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

Quick Links

App download animated image Get the free App now