உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது . இந்த உலககோப்பை தொடரின் 21வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. தென் ஆப்ரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் நீடிக்க முட்டியும் என்பதால் இந்த போட்டி தென் ஆப்ரிக்கா அணிக்கு மிகவும் முக்கயமானது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா மற்றும் நூற் அலி ஜாத்ரன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹஸ்ரதுல்லா 22 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 6 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷஹிடி 8 ரன்னில் பெலுகுவயோ பந்தில் அவுட் ஆக பின்னர் நிலைத்து விளையாடிய நூற் அலி ஜாத்ரன் 32 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய அஸ்கர் டக்அவுட் ஆகி வெளியேற அதன் பின்னர் களம் இறங்கிய முகமது நபி 1 ரன்னில் பெலுகுவயோ பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ரஷித் கான் மட்டும் நிலைத்து நின்று 35 ரன்கள் அடிக்க ஆப்கான்ஸ்தான் அணி 125 ரன்களை அடித்தது. ஆட்டத்தின் நடுவில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு டிஆர்எஸ் முறைபடி 127 ரன்களை இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின்னர் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குயிடன் டி காக் மற்றும் ஆஷிம் அம்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய போதிலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை இருவரும் வெளிபடுத்தினர். ஒரு முனையில் அம்லா பொறுமையாக விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய குயிடன் டி காக் அரைசதம் விளாசினார்.
இந்த அரைசதம் இந்த உலககோப்பை தொடரின் இரண்டாவது அரைசதம் ஆகும். ஓடிஐ கேரியரில் குயிடன் டி காக்கின் 24வது அரைசதத்தை பூர்த்தி செய்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். குயிடன் டி காக் 68 ரன்னில் நயிப் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய பெலுகுவயோ நிலைத்து விளையாடிய நிலையில் தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்வு செய்யப்பட்டார்.