நியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா அணி

Pravin
ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரின் 37வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பலம் வாய்ந்த நியூசிலாந்நு அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் கடந்த உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய அணிகள். ஆஸ்திரேலியா அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே போல் நியூசிலாந்து அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த நிலையில் கடைசியாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது அவர்களின் தொடக்கம் தான் ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான தொடக்கத்தை சிதைத்தது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் 8 ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

டெரன்ட் போல்ட்
டெரன்ட் போல்ட்

அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் நம்பிகையான வீரர் டேவிட் வார்னர் 16 ரன்னில் லாக்கி பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய வீரர்களான உஸ்மான் காவாஜா நிலைத்து விளையாட மறுமுனையில் தடுமாறிக்கொண்டிருந்தார் ஸ்டிவன் ஸ்மித். ஆஸ்திரேலியா அணியில் நிலைத்து நின்று சீரான ஆட்டத்தை வெளிபடுத்த கூடிய ஸ்டிவன் ஸ்மித் 5 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் உஸ்மான் காவாஜா உடன் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் ஸ்டோனிஸ் 21 ரன்னில் ஜீம்மி நீசம் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் 1 ரன்னில் ஜீம்மி நீசம் பந்தில் அவுட் ஆகினார்.

கேரி மற்றும் காவாஜா
கேரி மற்றும் காவாஜா

உஸ்மான் காவாஜா-விற்கு யாரும் பாட்னர்ஷிப் கொடுக்காத நிலையில் அடுத்து களம் இறங்கிய அலேக்ஸ் கேரி நிலைத்து விளையாடினார். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டிற்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அலேக்ஸ் கேரி 71 ரன்கள் அடித்து கேன் வில்லியம்சன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பெட் கம்மிங்ஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் உஸ்மான் காவாஜா 88 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேற ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 243 ரன்களை மட்டுமே அடித்தது. நியுசிலாந்து பவுலர் போல்ட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஹென்றி நிக்கோலஸ் 8 ரன்னில் பெஹ்ரென்டார்ப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் மார்டின் கப்தில் 20 ரன்னில் பெஹ்ரென்டார்ப் பந்தில் அவுட் ஆகினார்.

பெஹ்ரென்டார்ப்
பெஹ்ரென்டார்ப்

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நியூசிலாந்து அணி 25 ஓவர்களுக்கு 96 ரன்கள் மட்டுமே அடித்து மிகவும் பொறுமாயாக விளையாடிய நிலையில் வில்லியம்சன் 40 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ரோஸ் டெய்லரும் 30 ரன்னில் பெட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் பலமாக கருதப்படும் ஆல்ரவுண்டர்ஸ் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சிதைந்தனர். டாம் லேதம் 14 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டி கிராண்டோகோம் ஸ்மித் ஓவரில் டக்அவுட் ஆகினார்.

ஸ்டார்க்
ஸ்டார்க்

அதன் பின்னர் களம் இறங்கிய நீசம் 9 ரன்னிலும் மிட்செல் சாட்னெர் 12 ரன்னிலும் ஈஸ் ஜோதி 5 ரன்னிலும் பெர்குசன் டக்அவுட் ஆகி வெளியேற நியூசிலாந்து அணி 157 ரன்னில் அனைத்து விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now