அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஹென்றி நிக்கோலஸ் 8 ரன்னில் பெஹ்ரென்டார்ப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட மறுமுனையில் மார்டின் கப்தில் 20 ரன்னில் பெஹ்ரென்டார்ப் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நியூசிலாந்து அணி 25 ஓவர்களுக்கு 96 ரன்கள் மட்டுமே அடித்து மிகவும் பொறுமாயாக விளையாடிய நிலையில் வில்லியம்சன் 40 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ரோஸ் டெய்லரும் 30 ரன்னில் பெட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் பலமாக கருதப்படும் ஆல்ரவுண்டர்ஸ் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சிதைந்தனர். டாம் லேதம் 14 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டி கிராண்டோகோம் ஸ்மித் ஓவரில் டக்அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய நீசம் 9 ரன்னிலும் மிட்செல் சாட்னெர் 12 ரன்னிலும் ஈஸ் ஜோதி 5 ரன்னிலும் பெர்குசன் டக்அவுட் ஆகி வெளியேற நியூசிலாந்து அணி 157 ரன்னில் அனைத்து விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டார்.