டேவிட் வார்னர் மற்றும் பின்ச் இருவரும் பாட்னர்ஷிப்-ல் தொடர்ந்து அசத்தல்

Pravin
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

உலககோப்பை தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் முதல் 25 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் உலககோப்பை தொடரின் 26வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலககோப்பை தொடரின் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. வங்கதேச அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்த நிலையில் இந்த போட்டி வங்கதேச அணிக்கு முக்கியமான போட்டியாகும். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக விலகி இருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் மீண்டும் அணியில் இணைந்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இருவரும் இந்த உலககோப்பை தொடரில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். இந்த ஜோடி இந்த போட்டியில் மீண்டும் ஒரு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். வங்கதேச அணி வீரர்கள் முதல் பத்து ஓவர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்திய நிலையில் வார்னர் மற்றும் பின்ச் இருவரும் விக்கெட்களை இழக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடி இந்த உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக 100+ பாட்னர்ஷிப் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 101 ரன்கள் எடுத்த போது இந்த உலககோப்பை தொடரில் ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 500 ரன்களை கடந்தனர். இதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் 300+ ரன்கள் அடித்த இரண்டாம் இடத்தில் உள்ளனர். தொடந்து விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் அரைசதங்கள் விளாச, இந்த ஜோடியில் ஆரோன் பின்ச் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 53 ரன்களில் சௌவுமியா சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய உஸ்மான் காவாஜா நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

டேவிட் வார்னர் 166
டேவிட் வார்னர் 166

வார்னர் அதிரடியாக விளையாட தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் தனது ஓடிஐ கேரியரில் 16வது சதத்தை பூர்த்தி செய்தார். சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய வார்னர் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் 166 ரன்னில் சௌவுமியா சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கிளான் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கிளான் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 32 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் 1 ரன்னில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களும் அலேக்ஸ் கேரி 11 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆஸ்திரேலியா அணி கடைசி 6 ஓவர்களில் 96 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியின் 46 ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெலுத்து வாங்கியது. ஓவரின் முதல் பந்தில் ருபல் ஹசன் நோ-பால் விசிய நிலையில் அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் சிக்ஸர் விளாசினார்.

கிளான் மேக்ஸ்வெல்
கிளான் மேக்ஸ்வெல்

ஓவரின் இரண்டாவது பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விளாச அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர்கள் விளாசினார். நான்காவது பந்து ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஐந்தாவது பந்தில் மூன்று ரன்கள் அடித்தனர். மற்றும் ஓவரின் கடைசி பந்தில் உஸ்மான் காவாஜா பவுண்டரி அடிக்க ஆஸ்திரேலியா அணி 46வது ஓவரில் 24 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 381 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிக்கு எதிராக உலககோப்பை தொடர்களில் அடித்த இரண்டாவது பெரிய ஸ்கோர் இதுவாகும். இந்த போட்டியில் சவுமியா சர்க்கார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டேவிட் வார்னர் இந்த போட்டியில் 166 ரன்கள் அடித்ததன் முலம் இந்த உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். ஆரோன் பின்ச் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil