கடைசி உலககோப்பை போட்டியில் வெற்றியுடன் விடைபெற்ற இம்ரான் தாஹிர்

Pravin
இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் தொடரைவிட்டு வெளியேறிய தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நோக்கில் விளையாடியது. தென் ஆப்ரிக்கா அணி ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிய நிலையில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் குயிடன் டி காக் மற்றும் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் குயிடன் டி காக். மறுமுனையில் மார்க்ரமும் அடித்து விளையாட இருவரும் இணைந்து 79 ரன்கள் சேர்த்தனர். மார்க்ரம் 34 ரன்கள் சேர்த்த நிலையில் நேதம் லயன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் நிலைத்து விளையாடினார். குயிடன் டி காக் நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். அதை தொடர்ந்து குயிடன் டி காக் 52 ரன்னில் நேதன் லயன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் இணைந்த டுசன் நிலைத்து விளையாடினார். தொடர்ந்து இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.

பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

அதன் பின்னர் தொடர்ந்து விளையாடி இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 151 ரன்களை குவித்தது. கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் இந்த உலககோப்பை தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். பாப் டு ப்ளஸிஸ் 100 ரன்கள் எடுத்தபோதே பெஹ்ரென்ட்ஃராப் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து விளையாடிய டுமினி வந்த வேகத்தில் 16 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ப்டோரியஸ் 2 ரன்னில் அதே மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆக கடைசி வரை நிலைத்து விளையாடிய டுசன் 95 ரன்னில் பெட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 325-6 ரன்களை சேர்த்தது. தென் ஆப்ரிக்கா அணியில் பாப் டு ப்ளஸிஸ் சதம் விளாசிய நிலையில் ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் 2, நேதன் லயன் 2, பெஹ்ரென்ட்ஃராப் 1 விக்கெட்களை விழ்த்தினர்.

அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு அணி கேப்டன் ஆரோன் பின்ச் 3 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜா சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் காயத்தால் வெளியேறினார். அதை தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் வார்னர் இருப்பினும் வார்னருக்கு மறுமுனையில் களம் இறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

அடுத்து களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் 7 ரன்னில் ப்ரிட்டோரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 22 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் 12 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். டேவிட் வார்னர் ஒரு முனையில் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 122 ரன்னில் டேவிட் வார்னர் ப்டோரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய அலேக்ஸ் கேரி நிலைத்து விளையாட தொடங்கினார்.

தென் ஆப்ரிக்கா அணி
தென் ஆப்ரிக்கா அணி

ஆனால் மறுமுனையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் அலேக்ஸ் கேரி 85 ரன்னில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார். தென் ஆப்ரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா அணி இந்த உலககோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் இருந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now