உலககோப்பை தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 8வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இந்த உலககோப்பை தொடரில் தனது முதல் போட்டியை விளையாடியது இந்தியா அணி. அதே நேரத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடிவுள்ள தென் ஆப்ரிக்கா அணி இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ஹஷிம் அம்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் புவனேஷ்வர் மற்றும் பும்ரா சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தினர். பும்ராவின் பந்து வீச்சை அம்லா மற்றும் குயிடன் டிகாக் இருவரும் தடுமாறிய நிலையில் அம்லா 6 ரன்னிலும் டி காக் 10 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆகினர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் வான் டெர் டுஸ்ஸென் இருவரும் இந்தியா அணியின் சிறப்பான பந்து வீச்சில் நிலைத்து நின்று விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க யுவேந்திர சஹால் பந்து வீச வந்தார். சஹால் வீசிய 20வது ஓவரில் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் டுஸ்ஸென் இருவரும் அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து விளையாட டுமினி 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த பெலுகுவயோ நிலைத்து விளையாட மில்லர் 31 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து பெலுகுவயோ 38 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேரந்த ராபாடா மற்றும் மோரிஸ் இருவரும் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 227-9 ரன்கள் சேர்த்தனர்.
அதன் பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஷிகார் தவண் வந்த வேகத்தில் 8 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் வீராட் கோலி 18 ரன்னில் பெலுகுவயோ பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கே.எல். ராகுல் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார்.
ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். கே.எல் ராகுல் 26 ரன்னில் ராபாடா வீசிய 32 வது ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாட ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 47.3 ஓவரில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி உலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.