பிரீ-ஹிட்டில் அவுட் ஆன கிறிஸ் கெய்ல் நடுவரின் தவறான முடிவால் வெஸ்ட் இண்டிஸ் அணி தோல்வி

Pravin
Enter caption ஸ்டார்க் வீசிய முந்தைய நோ-பால்
ஸ்டார்க் வீசிய முந்தைய நோ-பால்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 10வது லீக் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள நாட்டிகாம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் விளையாடி முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது.

 ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். வந்த வேகத்தில் கேப்டன் பின்ச் 6 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் டேவிட் வார்னர் 3 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய காவாஜா 13 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வெல் காட்ரெல் ஓவரில் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆஸ்திரேலியா அணி 38-4 விக்கெட்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் ஸ்டோனிஸ் 19 ரன்னில் அவுட் ஆகினார்.

ஸ்டிவன் ஸ்மித்
ஸ்டிவன் ஸ்மித்

அதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் மற்றும் அலேக்ஸ் கேரி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய அலேக்ஸ் கேரி 45 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த நேதன் கூல்ட்டர்-நைல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

நேதன் கூல்ட்டர் நைல்
நேதன் கூல்ட்டர் நைல்

மறுமுனையில் அரைசதம் விளாசிய ஸ்மித் 73 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் நேதன் கூல்ட்டர் -நைல் மட்டும் அதிரடியாக 92 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லெவிஸ் இருவரும் களம் இறங்கினர். லெவிஸ் 1 ரன்னிலும் கெய்ல் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ஷாய் ஹோப் நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பூரன் 40 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய ஹெட்மையர் 21 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

ஹோல்டர் 51
ஹோல்டர் 51

சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹோப் 68 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் நிலைத்து விளையாட ரஸல் 15 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ப்ராத்வெயிட் 16 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த காட்ரெல் 1 ரன்னில் அதே ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டும் அடித்தது. ஆஸ்திரேலியா அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கூல்ட்டர்- நைல் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links