உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த உலககோப்பை தொடரின் 23வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் நான்கு போட்டிகள் விளையாடிய நிலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்ய மேற்கு இந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கபட்ட கிறிஸ் கெய்ல் 13 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலைத்து விளையாடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 116 ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய எவின் லேவிஸ் 70 ரன்கள் அடித்து ஷகிப் அல் ஹசன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 25 ரன்கள் அடித்து ஷகிப் அல் ஹசன் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹெட்மயர் வந்த முதல் பந்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக அரைசதம் விளாசிய ஹெட்மயர் 50 ரன்னில் முஸ்தாஃபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ரஸல் அதே முஸ்தாஃபிசுர் ஓவரில் டக்அவுட் ஆகி வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹோல்டர் 33 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ஷாய் ஹோப் 96 ரன்னில் முஸ்தாஃபிசுர் பந்தில் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்களை அடித்தது.
அதன் பின்னர் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் சௌவுமியா சர்கார் மற்றும் தமீம் இக்பால் இருவரும் களம் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய இருவரும் நிலைத்து விளையாடிய நிலையில் சௌவுமியா சர்கார் 29 ரன்னில் ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் நிலைத்து விளையாட தமீம் இக்பால் 48 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேற அதன் பின்னர் களம் இறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 1 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய லிட்டன் தாஸ் ஷிகிப் அல் ஹசன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் இந்த உலககோப்பை தொடரில் இரண்டாவது சதத்தை விளாசினார். அவருடன் விளையாடிய லிட்டன் தாஸ் ஹாட்-ரிக் சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசி அசத்த வங்கதேச அணி 322 என்ற பெரிய இலக்கை 41.3 ஓவரிலேயே அடித்து அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.