வெஸ்ட் இண்டிஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி அசத்திய இந்திய அணி 

Pravin
கோலி மற்றும் தோனி
கோலி மற்றும் தோனி

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள மேன்சேஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்தியா அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணி தாங்கள் விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் களம் இறங்கினர்.

இந்திய அணி வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை எற்படுத்திய போதிலும் ரோஹித் சர்மா 18 ரன்னில் கீமோ ரோச் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கே.எல் ராகுல் வீராட் கோலி உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் வீசிய 20வது ஓவரில் கே.எல் ராகுல் 48 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் 14 ரன்னில் கீமோ ரோசின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேதார் ஜாதவ் 7 ரன்னில் அதே கீமோ ரோச் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

வீராட் கோலி  72
வீராட் கோலி 72

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் வீராட் கோலி அரைசதம் விளாசி அசத்தினார். அதை தொடர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்த தோனி மற்றும் கோலி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். வீராட் கோலி இந்த உலககோப்பை தொடரில் இன்னும் சதம் விளாசாத நிலையில் இந்த போட்டியில் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 72 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

மகேந்திர சிங் தோனி 56*
மகேந்திர சிங் தோனி 56*

கடைசி ஓவர்களில் தோனி மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் ரன்களை சேர்க்க ஹர்டிக் பாண்டியா 46 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட தோனி அரைசதம் விளாசினார். இந்தியா அணி 50 ஓவர்கள் முடிவில் 268 ரன்களை சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் அம்ப்ரிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 6 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகினார்.

கிறிஸ் கெய்ல் விக்கெட் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்னில் அதே முகமத் சமி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் அம்ப்ரிஸ் இருவரும் சிறிது நேரம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு நிலைத்து விளையாடிய நிலையில் சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் இந்திய அணியி
விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர்

அதன் பின்னர் பேட்டிங் செய்ய களம் இறங்கிய அதிரடி வீரர் ஹெத்மயர் நிக்கோலஸ் பூரனுடன் இணைந்து சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். நிக்கோலஸ் பூரன் 28 ரன்கள் எடுத்த நிலையில் குல்திப் யாதவ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் வந்த வேகத்தில் 6 ரன்னில் சாஹல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ப்ராத்வெய்ட் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார்.

பும்ரா
பும்ரா

அதை தொடர்ந்து களம் இறங்கிய ஆலேன் அதே பும்ரா ஓவரில் டக்அவுட் ஆக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய அணியிடம் சுருண்டது. அதன் பின்னர் களம் இறங்கிய ரோச் 14 ரன்களும் காட்ரெல் 10 ரன்களும் அடித்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 143 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியில் முகமத் சமி 4 விக்கெட்களும் பும்ரா மற்றும் சாஹல் 2 விக்கெட்களும் விழ்த்திய நிலையில் குல்திப் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா தலா 1 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now