உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 20வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும் கடந்த இரண்டு போட்டிகளும் மழை காரணமாக ரத்தாகிய நிலையில் இலங்கை அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இருகின்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடி ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய இருவரும் பின்னர் அதிரடியாக விளையாட தொடங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் இந்த போட்டியில் 26 ரன்னில் தனஜெயா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜா 10 ரன்னில் அதே தனஜெயா டி சில்வா பந்தில் அவுட் ஆக பின்னர் ஜோடி சேர்ந்த பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
அதிரடியாக விளையாடிய கேப்டன் பின்ச் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய பின்ச் 150 ரன்களை கடந்த நிலையில் 153 ரன்னில் உதானா பந்தில் அவுட் ஆக அடுத்தாக ஸ்மித் 73 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தனர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 334 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் கருணரத்னே மற்றும் குசல் பெரேரா இருவரும் களம் இறங்கினர். இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தங்களின் அதிரடி ஆட்டத்தின் முலமாக வெளிபடுத்தினர். சிறப்பான ஆட்டத்தின் இருவரும் அரைசதம் விளாசினர். குசல் பெரேரா 52 ரன்கள் அடித்து ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய திரிமனே 16 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் கருணரத்னே 97 ரன்னில் கேன் ரிச்சடர்சன் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் குசல் மென்டிஸ் 30 ரன்கள் அடித்து அவரும் அவுட் ஆக இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆரோன் பின்ச் தேர்வு செய்யப்பட்டார்.