உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 25வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிந்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதுவரை தோல்வியே அடையாத நியூசிலாந்து அணியும் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டி தென் ஆப்ரிக்கா அணி கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது. இந்த போட்டியில் காயத்தில் இருந்த லுங்கி இங்கிடி மீண்டும் அணியில் இணைந்தார். நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடும் 11 வீரர்களை மாற்றாமல் விளையாடியது.
இந்த போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தடை பெற்ற நிலையில் 49 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் அம்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த குயிடன் டி காக் 5 ரன்னில் போல்ட் பந்து வீச்சில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் விக்கெட்டை இழக்காமல் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருப்பினும் 14வது ஓவரில் பாப் டுப் ப்ளஸிஸ் 23 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மார்க்ரம் நிலைத்து விளையாடிய நிலையில் ஹசிம் அம்லா ஓடிஐ கேரியரில் 8000 ரன்களை கடந்து அசத்தினார். 176 போட்டிகளில் 8000 ரன்களை அடித்ததன் முலம் குறைந்து போட்டிகளில் 8000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். முதல் இடத்தில் இந்திய அணியின் வீராட் கோலி உள்ளார். நிலைத்து விளையாடிய அம்லா 55 ரன்னில் சாட்னெர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டுசன் நிலைத்து விளையாட மறுமுனையில் மார்க்ரம் 38 ரன்னில் டி கிராண்ட்கோம் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் களம் இறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 45வது ஓவரில் டேவிட் மில்லர் 36 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து வந்த பெலுகுவயோ அதே பெர்குசன் பந்தில் டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய டுசன் 67 ரன்கள் அடித்து ஆட்டத்தின் கடைசி வரை களத்தில் இருந்தார். தென் ஆப்ரிக்கா அணி 49 ஓவர்கள் முடிவில் 241-6 ரன்கள் அடித்தது.
அதன் பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கொலின் முன்ரோ 9 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மார்டின் கப்தில் ஆட்டத்தின் 15வது ஓவரில் பெலுகுவயோ பந்தில் ஹிட் விக்கெட் ஆகி 35 ரன்னில் வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ரோஸ் டெய்லர் 1 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியவர் ரோஸ் டெய்லர். அதன் பின்னர் களம் இறங்கிய டாம் லேதமும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 1 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். நியூசிலாந்து அணி 80-4 என்ற நிலைக்கு சென்றது. நிலைத்து விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசினார். பின்னர் வில்லியம்சன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் ஜீம்மி நீசம். இருவரும் வேகமாக ரன் குவிப்பில் ஈடுப்பட்டனர். நீசம் 23 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய டி கிராண்ட்கோம் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்ட டி கிராண்டோகோம் அரைசதம் விளாசிய நிலையில் 60 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசி அசத்தினார். இது வில்லியம்சனின் 12வது சதமாகும். நியூசிலாந்து அணி மூன்று பந்துகள் மீதம் இருந்த நிலையில் 245 ரன்களை அடித்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.