அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மார்டின் கப்தில் ஆட்டத்தின் 15வது ஓவரில் பெலுகுவயோ பந்தில் ஹிட் விக்கெட் ஆகி 35 ரன்னில் வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ரோஸ் டெய்லர் 1 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியவர் ரோஸ் டெய்லர். அதன் பின்னர் களம் இறங்கிய டாம் லேதமும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 1 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். நியூசிலாந்து அணி 80-4 என்ற நிலைக்கு சென்றது. நிலைத்து விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசினார். பின்னர் வில்லியம்சன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் ஜீம்மி நீசம். இருவரும் வேகமாக ரன் குவிப்பில் ஈடுப்பட்டனர். நீசம் 23 ரன்னில் கிறிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய டி கிராண்ட்கோம் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்ட டி கிராண்டோகோம் அரைசதம் விளாசிய நிலையில் 60 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசி அசத்தினார். இது வில்லியம்சனின் 12வது சதமாகும். நியூசிலாந்து அணி மூன்று பந்துகள் மீதம் இருந்த நிலையில் 245 ரன்களை அடித்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.