ஆப்கானிஸ்தான் அணியை பேராடி வீழ்த்தியது இந்திய அணி

Pravin
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி 28
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி 28

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள பல நகரங்களில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 28வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா அணி விளையாடி உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியின் மீது எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிட்டதக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இந்தியா அணியில் புவனேஷ்வர் குமார் பதில் முகமத் சமி களம் இறக்கப்பட்டார். அதன் படி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை முஜிப் ரகுமான் பந்து வீசினார். முஜிப் ரகுமான் வீசிய ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாடினார். வீராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சிறிது நேரம் தக்குபிடித்து விளையாடினர்.

வீராட் கோலி
வீராட் கோலி

நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுல் 30 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர் நிலைத்து விளையாடினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 29 ரன்னில் ரஹமத் ஷாவின் பந்தில் lbw ஆகி வெளியேறினார். அதன் பின்னர் மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் தோனி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய வீராட் கோலி அரைசதம் கடந்த நிலையில் 67 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் நிலைத்து விளையாட இந்திய அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது. இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி 28 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார்.

கேதார் ஜாதவ்
கேதார் ஜாதவ்

அடுத்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா 7 ரன்னில் அஃதாப் ஆலம் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முகமது சமி 1 ரன்னில் குல்பதின் நைப் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் நிலைத்து விளையாடிய கேதர் ஜாதவ் அரைசதம் விளாசினார். கேதர் ஜாதவ் 52 ரன்னில் நைப் பந்தில் அவுட் ஆகிய நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 224-8 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா மற்றும் குல்பதின் நைப் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹஸ்ரதுல்லா 10 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து ஜோடி சேர்ந்த நைப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் குல்பதின் நைப் 27 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி நிலைத்து விளையாட மறுமுனையில் ரஹமத் ஷா 36 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார்.

முகமது நபி
முகமது நபி

அதனை தொடர்ந்து களம் இறங்கிய முகமது நபி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஷஹிடி 21 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அஸ்கர் 8 ரன்னில் சஹல் பந்தில் அவுட் ஆகினார். எனினும் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி கொண்டே இருந்த நிலையில் அடுத்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜாட்ரன் 21 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் 14 ரன்னில் சஹல் பந்தில் அவுட் ஆகினார். ஆனால் முகமது நபி கடைசி வரை இந்திய அணிக்கு அச்சுருத்தலை கொடுத்து கொண்டே இருந்தார்.

முகமத் சமி
முகமத் சமி

முகமது நபி அரைசதம் விளாசிய நிலையில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. நபி முதல் பந்தில் பவுண்டரி விளாசிய நிலையில் மூன்றாவது பந்தில் அவுட் ஆகினார் நபி. இந்தியா அணியின் வெற்றி உறுதியான நிலையில் முகமத் சமி அடுத்த இரண்டு பந்துகளிலும் விக்கெட்களை வீழ்த்தி ஹாட்-ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links