ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹஸ்ரதுல்லா 10 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து ஜோடி சேர்ந்த நைப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் குல்பதின் நைப் 27 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி நிலைத்து விளையாட மறுமுனையில் ரஹமத் ஷா 36 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய முகமது நபி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஷஹிடி 21 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அஸ்கர் 8 ரன்னில் சஹல் பந்தில் அவுட் ஆகினார். எனினும் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி கொண்டே இருந்த நிலையில் அடுத்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜாட்ரன் 21 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் 14 ரன்னில் சஹல் பந்தில் அவுட் ஆகினார். ஆனால் முகமது நபி கடைசி வரை இந்திய அணிக்கு அச்சுருத்தலை கொடுத்து கொண்டே இருந்தார்.
முகமது நபி அரைசதம் விளாசிய நிலையில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. நபி முதல் பந்தில் பவுண்டரி விளாசிய நிலையில் மூன்றாவது பந்தில் அவுட் ஆகினார் நபி. இந்தியா அணியின் வெற்றி உறுதியான நிலையில் முகமத் சமி அடுத்த இரண்டு பந்துகளிலும் விக்கெட்களை வீழ்த்தி ஹாட்-ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.