வெஸ்ட் இண்டிஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி

Pravin
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் போட்டி 29
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் போட்டி 29

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 29வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள மேன்சேஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஷெல்டன் காட்ரெல் வீசினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை டக்அவுட் செய்து அசத்தினார் காட்ரெல். மார்டின் கப்தில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் பூஜ்ஜுயத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

காட்ரெல்
காட்ரெல்

ஆனால் நியூசிலாந்து அணியில் சற்றும் தடுமாறாமல் தொடந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர் கேப்டன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும். இந்த ஜோடியின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் திணறியது மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 160 ரன்களை குவித்தது.

வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர்
வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர்

ரோஸ் டெய்லர் 69 ரன்னில் கிறிஸ் கெய்ல் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய டாம் லேதம் சிறிது நேரம் தாக்குபிடிக்க கேன் வில்லியம்சன் சதம் விளாசி அசத்தினார். இது உலககோப்பை தொடரில் இவரின் இரண்டாவது சதமாகும். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் கேன் வில்லியம்சன் மறுமுனையில் டாம் லேதம் 12 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேன் வில்லியம்சன் 148 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ஜீம்மி நீசம் நிலைத்து விளையாட மறுமுனையில் டி கிராண்டோகோம் 16 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் மிச்செல் சாட்னெர் நிலைத்து விளையாட ப்ராத்வெய்ட் வீசிய கடைசி ஓவரில் சாட்னெர் 10 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஜீம்மி நீசம் 28 ரன்னில் அவுட் ஆகினார். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 291-8 ரன்களை அடித்தது.

அதன் பின்னர் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் களம் இறங்கினர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஷாய் ஹோப் 1 ரன்னில் போல்ட் வீசிய ஓவரில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரனும் 1 ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஹெட்மயர் கிறிஸ் கெய்ல் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர்கள் இருவரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் கெய்ல் அரைசதம் விளாசினார்.

போல்ட்
போல்ட்

அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹெட்மயரும் அரைசதம் விளாச இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 122 ரன்களை சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடியின் விக்கெட்களை வீழ்த்த நியூசிலாந்து அணி பெர்குசனை பந்து வீச வைத்த நிலையில் பெகுர்சன் வீசிய 23வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 54 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் அடுத்த பந்திலேயே டக்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து 24வது ஓவரில் கெய்ல் 87 ரன்னில் டி கிராண்டோகோம் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ப்ராத்வெய்ட் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

ப்ராத்வெய்ட்
ப்ராத்வெய்ட்

சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்ட ப்ராத்வெய்ட் சதம் விளாசிய நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியில் போல்ட் 4, பெர்குசன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் ஐந்தாவது வெற்றி இதுவாகும். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil