அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரனும் 1 ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஹெட்மயர் கிறிஸ் கெய்ல் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர்கள் இருவரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய கிறிஸ் கெய்ல் அரைசதம் விளாசினார்.
அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹெட்மயரும் அரைசதம் விளாச இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 122 ரன்களை சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடியின் விக்கெட்களை வீழ்த்த நியூசிலாந்து அணி பெர்குசனை பந்து வீச வைத்த நிலையில் பெகுர்சன் வீசிய 23வது ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் 54 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் அடுத்த பந்திலேயே டக்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து 24வது ஓவரில் கெய்ல் 87 ரன்னில் டி கிராண்டோகோம் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ப்ராத்வெய்ட் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்ட ப்ராத்வெய்ட் சதம் விளாசிய நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியில் போல்ட் 4, பெர்குசன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். நியூசிலாந்து அணியின் ஐந்தாவது வெற்றி இதுவாகும். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.