தென் ஆப்ரிக்கா அணியை சுருட்டியது பாகிஸ்தான் அணி

Pravin
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா போட்டி 30
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா போட்டி 30

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 30வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இதுவரை விளையாடி உள்ள போட்டிகளில் ஒரு வெற்றியை மற்றும் பெற்றுள்ளன. இந்த போட்டிக்கு முன்னர் தென் ஆப்ரிக்கா அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்திலும் பாகிஸ்தான் அணி 9வது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீர்ரகள் பக்கர் ஜாமன் மற்றும் இமாம் உல் ஹாக் இருவரும் களம் இறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்கள் இருவரும் விக்கெட்களை இழக்காமல் விளையாடினர். முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பக்கர் ஜாமன் இம்ரான் தாஹிர் பந்தில் தடுமாறி வந்த நிலையில் 44 ரன்னில் பக்கர் ஜாமன் அவுட் ஆகினார்.

பாபர் ஆஷம்
பாபர் ஆஷம்

அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆஷம் வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் மறுமுனையில் இமாம் உல் ஹாக் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இமாம் உல் ஹாக் 44 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் வந்தது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் வந்த வேகத்தில் 20 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹரிஸ் சொகைல் அதிடியான ஆட்டத்தை வெளிபடுத்தியனார். பாபர் ஆஷம் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியிலும் அரைசத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய பாபர் ஆஷம் 69 ரன்னில் பெலுகுவயோ பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஹரிஸ் சொகைல் இமாத் வாசிம் உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார்.

ஹரிஸ் சொகைல்
ஹரிஸ் சொகைல்

அவருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இமாத் வாசிம் 23 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகி வெளியேற அடுத்து களம் இறங்கிய வாஹப் ரியஸ் 4 ரன்னில் அதே லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து நிலைத்து அதிரடியாக விளையாடிய ஹரிஸ் சொகைல் 89 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 308-7 ரன்களை சேர்த்தது. தென் ஆப்ரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 3, இம்ரான் தாஹிர் 2, பெலுகுவயோ மற்றும் மார்க்ரம் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

அதன் பின்னர் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் ஹசிம் அம்லா மற்றும் குயிடன் டி காக் இருவரும் களம் இறங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே ஹசிம் அம்லா 2 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகினார்.

அதை தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் நிலைத்து விளையாட ப்ளஸிஸ் மற்றும் டி காக் இருவரும் ஒரு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். பாப் டுப் ப்ளஸிஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் குயிடன் டி காக் அதிரடியாக விளையாடினார். அதே சமயம் குயிடன் டி காக் 47 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

அதன் பின்னர் களம் இறங்கிய மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வான் டெர் டுசன் நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் 63 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகினார்.

முகமத் அமீர்
முகமத் அமீர்

அதன் பின்னர் களம் இறங்கிய மில்லர் தடுமாறிய நிலையில் வான் டெர் டுசன் 36 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக டேவிட் மில்லர் 31 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய பெலுகுவயோ சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய போதிலும் மறுமுனையில் களம் இறங்கிய மோரிஸ் (16), ரபாடா(3), லுங்கி இங்கிடி (1) என அனைத்து வீரர்களும் வாஹப் ரியஸ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனா ஹரிஸ் சொகைல் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links