அதை தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் நிலைத்து விளையாட ப்ளஸிஸ் மற்றும் டி காக் இருவரும் ஒரு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். பாப் டுப் ப்ளஸிஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் குயிடன் டி காக் அதிரடியாக விளையாடினார். அதே சமயம் குயிடன் டி காக் 47 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வான் டெர் டுசன் நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் 63 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மில்லர் தடுமாறிய நிலையில் வான் டெர் டுசன் 36 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக டேவிட் மில்லர் 31 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய பெலுகுவயோ சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய போதிலும் மறுமுனையில் களம் இறங்கிய மோரிஸ் (16), ரபாடா(3), லுங்கி இங்கிடி (1) என அனைத்து வீரர்களும் வாஹப் ரியஸ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனா ஹரிஸ் சொகைல் தேர்வு செய்யப்பட்டார்.