உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 31 வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள சாவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளிலும் தோல்வியே அடைந்துள்ள நிலையில் வங்கதேச அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் அரையிறுதி வாய்ப்பை பெறுலாம் என்ற சூழ்நிலையில் விளையாடியது. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் புள்ளி பட்டியலில் பின்னிலையில் இருக்கும் அணிகள். இந்த போட்டியில் வங்கதேச அணியின் வெற்றி நோக்கியே போட்டி எதிர்பார்க்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்ய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லிட்டன் தாஸ் 16 ரன்னிலேயே ஆப்கானிஸ்தான் அணி வீரர் முஜிப் உல் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடந்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் இந்த உலககோப்பை தொடரில் வங்கதேச அணிக்காக இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில் இந்த போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தமீம் இக்பால் 36 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய மற்றொரு வங்கதேச அணியின் மூத்த நட்சத்திர வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் மறுமுனையில் ஷகிப் அல் ஹசன் அரைசதம் விளாசினார். ஷகிப் அல் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் முஜிப் உல் ரகுமான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய சவுமியா சர்கார் கடந்த சில போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் மிடில் ஆடரில் களம் இறங்கினார் ஆனால் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த முடியாமல் 3 ரன்னிலேயே முஜிப் உல் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார்.
முஜிப் மூன்று விக்கெட்கள் வீழ்த்தி அசத்திய நிலையில் அடுத்த களம் இறங்கிய முகமதுல்லாஹ் காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து விளையாடினார். பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய முகமதுல்லாஹ் 27 ரன்னில் குல்புதின் நைப் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மொஷடக் ஹசைன் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய முஷ்ஃபிகுர் ரஹீம் அரைசதம் கடந்த நிலையில் 83 ரன்னில் தாவுலட் ஜாட்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து நிலைத்து விளையாடிய மொஷடக் ஹசைன் 35 ரன்னில் அவுட் ஆக வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 262-7 ரன்களை சேர்த்தது.
அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் குல்புதின் நைப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்ந ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டாக ரஹமத் ஷா 24 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி 11 ரன்னில் மொஷடக் ஹசைன் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்கர் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் குல்புதின் நைப் 47 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடரந்து களம் இறங்கிய முகமது நபி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக்அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அஸ்கரும் 20 ரன்னில் ஷகிப் அல் ஹசன் சுழலில் சிக்கினார்.
இதை அடுத்து களம் இறங்கிய சன்வாரி நிலைத்து விளையாட மறுமுனையில் புதுமுக வீரர் இக்ரான் அல் கில் 11 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜாட்ரன் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் 23 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி வரை சன்வாரி 49 ரன்கள் அடித்து களத்தில் இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 200-10 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.