அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் குல்புதின் நைப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்ந ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டாக ரஹமத் ஷா 24 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி 11 ரன்னில் மொஷடக் ஹசைன் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்கர் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் குல்புதின் நைப் 47 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடரந்து களம் இறங்கிய முகமது நபி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக்அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அஸ்கரும் 20 ரன்னில் ஷகிப் அல் ஹசன் சுழலில் சிக்கினார்.
இதை அடுத்து களம் இறங்கிய சன்வாரி நிலைத்து விளையாட மறுமுனையில் புதுமுக வீரர் இக்ரான் அல் கில் 11 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜாட்ரன் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் 23 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி வரை சன்வாரி 49 ரன்கள் அடித்து களத்தில் இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 200-10 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.