உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரின் 36 வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலககோப்பை தொடரில் இருந்து ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் உள்ள நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ரஹமத் ஷா மற்றும் குல்புதின் நைப் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் குல்புதின் நைப் 15 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷஹிடி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய இக்ரம் அலி கில் நிலைத்து விளையாடினார். ரஹமத் ஷா நிலைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் 35 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய அஸ்கர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
மறுமுனையில் விளையாடிய இக்ரம் அலி கில் 24 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதிரடியாக விளையாடிய அஸ்கர் 42 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய நஜிபுல்லா ஜட்ரன் நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் விளையாடிய முகமது நபி 16 ரன்னில் வஹாப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார். ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஜட்ரன் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் அடுத்து களம் இறங்கியவர்களில் சின்வாரியும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நஜிபுல்லா ஐட்ரன் 42 ரன்னில் ஹஷன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் நிலைத்து விளையாடமல் 8 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஹமித் 1 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆக ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 227-9 ரன்களை அடித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் சின்வாரி கடைசி வரை அவுட் ஆகாமல் 19 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரை அடுத்து இமாத் வாசிம் மற்றும் வஹாப் ரியஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷதாப் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களம் இறங்கினர்.