ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்வென்றால் பக்கர் ஜமான் ஆப்கானிஸ்தான் அணி வழக்கமான தொடக்க பந்து வீச்சாளர் முஜிப் உல் ரகுமான் பந்தில் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் இமாம் வாசிமுடன் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆஷம் களம் இறங்கினார். இரண்டாவது விக்கெட்டிற்கு சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்த இந்த ஜோடியில் நிலைத்து விளையாடி கொண்டிருந்த இமாம் உல் ஹக் 36 ரன்னில் முகமது நபியின் சுழல் பந்தில் சிக்கினார். இதை அடுத்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார்.
மறுமுனையில் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்திய பாபர் ஆஷம் 45 ரன்னில் அதே முகமது நபியின் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஹரிஸ் சொகைல் தட்டுதடுமாறி விளையாடி கொண்டிருந்த நிலையில் மறுமுனையில் விளையாடிய முகமது ஹபிஸ் 19 ரன்னில் முஜிப் உல் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் சிறிது நேரம் தாக்கு பிடிக்க ஹரிஸ் சொகைல் 27 ரன்னிலும் கேப்டன் ஷஃப்ராஸ் அகமது 18 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய இமாத் வாசிம் பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் விளையாடினார். அதிரடியாக விளையாடிய இமாத் வாசிம் 49* ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 228 என்ற இலக்கை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இமாத் வாசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.