இந்தியா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து அணி

Pravin
England team
England team

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 38வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதியாகிவிடும் என்பதால் இந்த போட்டியை இந்திய அணி எதிர்பார்த்து விளையாடியது. அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டியை பெரிதும் எதிர்பார்த்து விளையாடியது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த போட்டியை அனைத்து அணியினரும் எதிர்பார்த்து இருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜெசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இடம் பெறாமல் இருந்த ஜெசன் ராய் இந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தனர். இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் கொடுக்க இங்கிலாந்து அணி முதல் 20வது ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடினர்.

பேர்ஸ்டோ மற்றும் ராய்
பேர்ஸ்டோ மற்றும் ராய்

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 160 ரன்களை குவித்தது. ஜெசன் ராய் அதிரடியாக அரைசதம் கடந்த நிலையில் 66 ரன்னில் குல்திப் யாதவ் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாடிய நிலையில் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார் பேர்ஸ்டோ. பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடி தனது 9வது ஓடிஐ சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் தடுமாறிய பேர்ஸ்டோ 111 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகினார்.

முகமத் சமி 5 விக்கெட்கள்
முகமத் சமி 5 விக்கெட்கள்

இதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் வந்த வேகத்தில் முகமத் சமியின் சிறப்பான பந்து வீச்சில் 1 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடரந்து களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 44 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து களம் இறங்கிய ஜாஸ் பட்லர் வந்தது முதல் அதிரடி காட்ட 20 ரன்னில் அவரும் சமியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து களம் இறங்கிய அனைவரும் அவுட் ஆகிய நிலையில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோகஸ் அரைசதம் அடித்து 79 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆக இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்களை குவித்தது. இந்திய அணியின் முகமத் சமி ஐந்து வீக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில் கே.எல் ராகுல் ரன் அடிக்காமலேயே கிறிஸ் வோக்ஸ் பந்தில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி ரோஹித் சர்மா உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். இருவரும் ஆட்டத்தை கொண்டு சென்ற நிலையில் வீராட் கோலி 66 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆக இந்திய அணியின் பலம் குறைந்தது. அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரோஹித் சர்மா 102 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தாலும் பண்ட் 32 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகினார்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

அதை தொடர்ந்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாட மறுமுனையில் ஹர்டிக் பாண்டியா வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய போது 45 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகி வெளியேற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. கடைசி வரை தோனி போராடிய போதிலும் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை தோனி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now