அதன் பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில் கே.எல் ராகுல் ரன் அடிக்காமலேயே கிறிஸ் வோக்ஸ் பந்தில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி ரோஹித் சர்மா உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். இருவரும் ஆட்டத்தை கொண்டு சென்ற நிலையில் வீராட் கோலி 66 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆக இந்திய அணியின் பலம் குறைந்தது. அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசினார். ரோஹித் சர்மா 102 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் அதிரடியாக ரன்களை குவித்தாலும் பண்ட் 32 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகினார்.
அதை தொடர்ந்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாட மறுமுனையில் ஹர்டிக் பாண்டியா வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய போது 45 ரன்னில் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகி வெளியேற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. கடைசி வரை தோனி போராடிய போதிலும் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி வரை தோனி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.