ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி

Pravin
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டி 4
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டி 4

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலககோப்பை தொடரின் 4வது போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஒராண்டு தடைக்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்த ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தடைக்கு பிறகு விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷெஹ்ஸாத் மற்றும் ஹஸ்ரதுல்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது பந்தில் முகமது ஷெஹ்ஸாத் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா நிலைத்து விளையாட இரண்டாவது ஓவரிலேயே ஹஸ்ரதுல்லாவும் பெட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஷஹிடி இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர்.

ஆடம் ஜாம்பா
ஆடம் ஜாம்பா

இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்த்த இருவரும் ஆடம் ஜாம்பாவின் சுழல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். ரஹ்மத் ஷா 43 ரன்னிலும் ஷஹிடி 18 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து களம் இறங்கிய நபி 7 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் நைப் மற்றும் நஜிபுல்லாஹ் ஸட்ரன் இருவரும் நிலைத்து விளையாடினர். கேப்டன் நைப் 31 ரன்னில் ஸ்டோனிஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த ரஷித் கான் அதிரடியாக 27 ரன்கள் அடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நஜிபுல்லாஹ் ஸட்ரன் அரைசதம் விளாசிய நிலையில் ஸ்டோனிஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

வார்னர் மற்றும் பின்ச்
வார்னர் மற்றும் பின்ச்

அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் பின்ச் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை சேர்த்தது. கேப்டன் பின்ச் 66 ரன்னில் நைப் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய காவாஜா சிறிது நேரம் நிலைத்து விளையாட மறுமுனையில் டேவிட் வார்னர் அரைசதம் விளாசினார்.

காவாஜா 15 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் நிலைத்து விளையாடிய நிலையில் 18 ரன்னில் அவரும் அவுட் ஆகினார். வார்னர் 89 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவரிலேயே வெற்றி இழக்கை எட்டியது. ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

App download animated image Get the free App now