அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

Pravin
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரில் 45 லீக் போட்டிகளை கொண்டது. இதில் இந்த உலககோப்பை தொடரில் தற்பொழுது 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 43வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணி ஏற்கனவே இந்த உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் தனது கடைசி லீக் போட்டியை ஆறுதல் வெற்றிகாக விளையாடியது.

அதே நேரம் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி தீர்மானிக்க முடியாத போட்டி என்றே கருதப்பட்ட நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வங்கதேச அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டியை வெற்றி பெறும் அரையிறுதி போட்டிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பக்கர் ஜமான் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பக்கர் ஜமான் தடுமாறிய நிலையில் 13 ரன்னில் சைஃபுதின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆஷாம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

பாபர் ஆஷாம்
பாபர் ஆஷாம்

இமாம் உல் ஹக் பாபர் ஆஷாமுடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கொடுத்தார். இருவரும் விறுவிறுவென ரன்களை குவித்த நிலையில் 157 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் பாபர் ஆஷாம் அதிரடியாக விளையாடினார். பாபர் ஆஷாம் சதம் அடிக்க நேருங்கிய நிலையில் 96 ரன்னில் சைஃபுதின் பந்தில் LBW முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய முகமது ஹபிஸ் நிலைத்து விளையாடிய நிலையில் இமாம் உல் ஹக் பொறுமையாக விளையாடியே சதம் விளாசினார். இமாம் உல் ஹக் சிறப்பான ஆட்டத்தின் முலம் சதம் விளாசிய உடனேயே அடுத்த பந்திலேயே ஹிட் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் ஹரிஸ் சொகைல் களம் இறங்கிய நிலையில் 6 ரன்னிலேயே முஸ்ஃபிகுர் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் சஃப்ராஸ் அகமது கையில் காயம் ஏற்பட்டு மீண்டும் பெவுலியன் திருப்பிய நிலையில் அடுத்து களம் இறங்கிய இமாத் வாசிம் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் வஹாப் ரியஸ் 2 ரன்னிலும் அதன் பின்னர் களம் இறங்கிய ஷதாப் கான் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் இமாத் வாசிம் 43 ரன்னில் முஸ்ஃபிகுர் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 315 ரன்களை சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சௌவுமியா சர்க்கார் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் தமீம் இக்பால் 8 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சௌவுமியா சர்க்கார் 22 ரன்னில் முகமது அமீர் பந்தில் அவுட் ஆகினார்.

ஷஹன் அப்ரிடி
ஷஹன் அப்ரிடி

இதை அடுத்து களம் இறங்கிய முஸ்தாபிசுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடிய நிலையில் ரஹீம் 16 ரன்னில் வஹாப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய லிட்டன் தாஸ் ஷகிப் அல் ஹசன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்ந நிலையில் அவரும் 32 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய முகமதுல்லாஹ் நிலைத்து விளையாட ஷகிப் அல் ஹசன் 64 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார்.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

இதை அடுத்து மகமதுல்லாஹ் 29 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து மொசடைக் ஹைசைன் 16 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் மோர்டாஷாவும் 15 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக வங்கதேச அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil