அதன் பின்னர் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சௌவுமியா சர்க்கார் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் தமீம் இக்பால் 8 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சௌவுமியா சர்க்கார் 22 ரன்னில் முகமது அமீர் பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய முஸ்தாபிசுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடிய நிலையில் ரஹீம் 16 ரன்னில் வஹாப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய லிட்டன் தாஸ் ஷகிப் அல் ஹசன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்ந நிலையில் அவரும் 32 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய முகமதுல்லாஹ் நிலைத்து விளையாட ஷகிப் அல் ஹசன் 64 ரன்னில் ஷஹின் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து மகமதுல்லாஹ் 29 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து மொசடைக் ஹைசைன் 16 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் கேப்டன் மோர்டாஷாவும் 15 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக வங்கதேச அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.