பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

Pravin
Pak vs Eng 6th match
Pak vs Eng 6th match

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் ரவுண்டு ராபின் முறையில் ஒரு மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். அந்த வகையில் 6வது போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியை அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால் பக்கர் ஜமான் 36 ரன்னில் மோயின் அலி பந்து வீச்சில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து இமாம்-உல்-ஹக்கும் 44 ரன்னில் அதே மோயின் அலி பந்து வீச்சில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பாபர் ஆஷம் மற்றும் முகமது ஹபிஸ் இருவரும் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தனர்.

பாபர் ஆஷம்
பாபர் ஆஷம்

அதிரடியாக விளையாடிய பாபர் ஆஷம் அரைசதம் விளாசிய நிலையில் 63 ரன்னில் மோயின் அலியிடம் அவுட் ஆக அதன் பின்னர் கேப்டன் ஷப்ஃராஸ் அகமது களம் இறங்கினார். மறுமுனையில் வந்தது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய ஹபிஸ் அரைசதம் விளாசி தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். முகமது ஹபிஸ் 84 ரன்னில் மார்க் வுட் பந்து வீச்சில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஆஷிப் அலி 14 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆக பின்னர் நிலைத்து விளையாடிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமது அரைசதம் விளாசினார்.

முகமது ஹபிஸ்
முகமது ஹபிஸ்

கடைசி ஓவர்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். வோக்ஸ் அடுத்தடுத்து 3 விக்கெட்களை எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 348 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜேன்னி பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராய் 8 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாட மறுமுனையில் நிலைத்து விளையாடிய பேர்ஸ்ரோவும் 32 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார்.

ஜோ ரூட்
ஜோ ரூட்

அதன் பின்னர் வந்த கேப்டன் மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் நிலைத்து விளையாடமல் அடுத்தடுத்து அவுட் ஆகி நிலையில் அதன் பின்னர் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். பட்லர் களம் இறங்கிய பிறகு ஆட்டம் இங்கிலாந்து அணி பக்கம் மாறியது. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி வேகமாக ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ரூட் இந்த உலககோப்பை தொடரின் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ரூட் 107 ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய மோயின் அலி நிலைத்து விளையாட பட்லரும் சதம் விளாசினார்.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

பட்லர் சதம் அடித்த அடுத்த பந்திலேயே அமிரிடம் அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து வோக்ஸ் மற்றும் மோயின் அலி இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் ரியஸ் பந்து வீச்சில் இருவரும் அவுட் ஆக அடுத்து ஆர்ச்சர் 1 ரன்னில் அவுட் ஆகி நிலையில் இங்கிலாந்து அணி 334 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது ஹபிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links