2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. உலககோப்பை தொடரின் 7வது போட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் குசல் பெரேரா மற்றும் கேப்டன் கருணரத்னே இருவரும் களம் இறங்கினர். வழக்கத்தை விட இந்த போட்டியில் இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. கருணரத்னே மற்றும் குசல் பெரேரா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 92 ரன்களை சேர்த்தது. கேப்டன் கருணரத்னே 30 ரன்னில் நபி பந்து வீச்சில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய திரிமனே சிறிது நேரம் நிலைத்து விட குசல் பெரேரா அரைசதம் விளாசினார்.
அதன் பின்னர் நபி வீசிய 22வது ஓவர் ஆட்டத்தின் திசையை மாற்றியது. அந்த ஓவரில் நபி நிலைத்து விளையாடிய திரிமனே மற்றும் அடுத்து களம் இறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகிய மூவரையும் ஓரே ஓவரில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய தனஜேயா டி சில்வா மற்றும் திசேரா பெரேரா இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர் அடுத்து வந்த உதனாவும் 10 ரன்னில் அவுட் ஆக நிலைத்து விளையாடிய குசல் பெரேரா 78 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் ஆட்டத்தின் நடுவில் மழை குறிக்கிட்டததால் ஆட்டம் தடைபெற்றது. பின்னர் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன்னை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமத் ஷெஹ்ஸாத் மற்றும் ஹஸ்ரதுல்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஷெஹ்ஸாத் 7 ரன்னில் மலிங்கா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 2 ரன்னில் உதனா பந்தில் அவுட் ஆகினார்.
இதைஅடுத்து அதிரடியாக விளையாடிய ஹஸ்ரதுல்லா 30 ரன்னில் பிரதீப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஷஹிடி 4 ரன்னில் பிரதீப் ஓவரிலும் முகமது நபி 11 ரன்னில் திசேரா பெரேரா ஓவரிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிஜிபுல்லா ஜட்ரன் மற்றும் கேப்டன் குல்படின் நைப் இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தும் நைப் 23 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை அடித்தது. இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நுவான் பிரதீப் தேர்வு செய்யப்பட்டார்.