உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் 9-வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் இருவரும் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும் சவுமியா சர்கார் 25 ரன்னில் மாட் ஹென்றி பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் ஷாகிப் அல் ஹசன் நிலைத்து விளையாடினார். மற்றொரு தொடக்க வீரர் தமீம் இக்பால் 24 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 19 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மிதுன் நிலைத்து விளையாடினார்.
ஷாகிப் அல் ஹசன் அரைசதம் விளாசிய நிலையில் 64 ரன்னில் டி கிராண்டோகோம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் மிதுன் 26 ரன்னில் மாட் ஹென்றி பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலைத்து விளையாடிய முகமதுல்லாஹ் 20 ரன்னில் மிட்செல் சாட்னெர் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மொசடடெக் ஹோசைன் 11 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து முகம்மது சைஃபுடின் நிலைத்து விளையாடிய நிலையில் மெஹாடி ஹசன் மற்றும் கேப்டன் மொர்டாஸா அடுத்தடுத்து அவுட் ஆகினர். சைஃபுடின் 29 ரன்னில் மாட் ஹென்றி பந்தில் அவுட் ஆகி நிலையில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை அடித்தது.
அதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்நு அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் களம் இறங்கினர். சிற்பபாக விளையாடிய இருவரும் ஷாகிப் அல் ஹசன் சுழல் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் நிலைத்து விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ரன்களை குவித்தார்.
அரைசதம் கடந்த டெய்லர் நிலைத்து விளையாடினார். வில்லியம்சன் 40 ரன்னில் மொஹாடி ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய டாம் லெதம் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய நீஷம் 25 ரன்களும் டி கிராண்டோகோம் 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அடுத்து வந்த சாட்னெர் சிறப்பாக விளையாடி நிலையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.