உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் முதல் மூன்று வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடரின் 24வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஜேன்னி பேர்ஸ்ரோ மற்றும் வின்ஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் வின்ஸ் 26 ரன்னில் டாவ்லட் ஸட்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை கடந்த சில போட்டிகளில் வெளிபடுத்தி வரும் நிலையில் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜேன்னி பேர்ஸ்ரோ அரைசதம் விளாசிய அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்களை சேர்த்தனர்.
அதிரடியாக விளையாடிய ஜேன்னி பேர்ஸ்ரோ 90 ரன்னில் நைப் பந்தில் அவுட் ஆகி 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பினை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் இயான் மோர்கன் வழக்கத்தை விட இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த போட்டிக்கு முன்பாக காயம் காரணமாக கேப்டன் இயான் மோர்கன் விளையாட மாட்டார் என கருதப்பட்ட நிலையில் இந்த போட்டியில் களம் இறங்கிய மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிக்ஸர் மழைபொழிந்த இயான் மோர்கன் 57 பந்துகளில் சதம் விளாசிய அசத்தல் சாதனை படைத்தார். தொடர்ந்து சிக்ஸர்களை மட்டுமே அடித்து விளையாடிய இயான் மோர்கன் இந்திய அணியின் ரோஹித் சர்மா படைத்த சாதனையை முடியத்தார்.
ரோஹித் சர்மா ஒரு போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் இந்த போட்டியில் இயான் மோர்கன் 17 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனையை படைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய நிலையில் ஜோ ரூட் 88 ரன்னில் நைப் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து கேப்டன் இயான் மோர்கனும் 148 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜாஸ் பட்லர் 2 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய மோயின் அலி அதிரடியாக விளையாடினார். மோயின் அலி 9 பந்தில் 31 ரன்கள் விளாச இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்கள் குவித்தது.