ஓரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இங்கிலாந்து அணி வீரர்கள்

Pravin
ஜேன்னி பேஸ்ரோ
ஜேன்னி பேஸ்ரோ

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து சர்வதேச நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இதுவரை 40 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து போட்டிகளிலும் கடந்த உலககோப்பை தொடர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகின்றது. இந்த உலககோப்பை தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் 300+ ஸ்கோர்கள் எளிதில் அடிக்கும் அளவிற்கு உள்ளதால் வீரர்கள் ரன் மழை பொழிகின்றனர். இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 41வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்த உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டி இரு அணிகளும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும். இந்த இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டி மட்டுமல்லாமல் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெறும் உலககோப்பை தொடரை வெல்ல முடியும் என்பதால் இந்த போட்டி இங்கிலாந்து பொருத்த வரையில் வாழ்வா சாவா என்ற கோணத்தில் பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்னி பேர்ஸ்டோ ஒரு புதிய சாதனை படைத்தார்.

ஜெசன் ராய்
ஜெசன் ராய்

அதோடு இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரர் ஜோ ரூட் இங்கிலாந்து அணி வீரர்கள் எவரும் படைக்காத சாதனையை இந்த போட்டியில் படைத்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடி இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக சில போட்டிகள் விளையாடமல் இருந்த ஜெசன் ராய் இந்தியா அணியுடனான போட்டியில் அணியில் இணைந்த நிலையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஜெசன் ராய் விளையாடாத இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ மற்றும் ஜெசன் ராய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை எற்படுத்தியது. இருவரும் இந்தியா அணிக்கு எதிரான போட்டியிலேயே அதிரடி காட்டியது போல் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி 100+ பாட்னர்ஷிப் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இந்த உலககோப்பை தொடரில் அடிக்கும் முன்றாவது 100+ பாட்னர்ஷிப் ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையை இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்திவ் ஹெய்டன் இருவரும் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நிகழ்த்தினர்.

அதன் பின்னர் இந்த 2019 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் இந்த சாதனையை நிகழ்த்தினர். அதற்கு அடுத்த படியாக இந்த இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ மற்றும் ஜெசன் ராய் இருவரும் நிகழ்த்தி உள்ளனர். அதை தொடர்ந்து விளையாடிய ஜெசன் ராய் தனது 17வது ஓடிஐ அரைசதத்தை அடித்த நிலையில் 60 ரன்னில் நீசம் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜேன்னி பேஸ்ரோ தொடர்ந்து தனது இரண்டாவது சதத்தை இந்த உலககோப்பை தொடரில் அடித்து அசத்தினார்.

ஜேன்னி பேர்ஸ் மற்றும் ராய்
ஜேன்னி பேர்ஸ் மற்றும் ராய்

இதற்கு முன்னர் நடைபெற்ற இந்தியா அணியுடனான போட்டியில் சதம் அடித்திருந்த ஜேன்னி பேர்ஸ்டோ இந்த போட்டியிலும் சதம் விளாசியதன் முலமாக தொடர்ந்து இரண்டு சதங்களை உலககோப்பை தொடர்களில் அடித்த முதல் இங்கிலாந்து அணி வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே போல் அனைத்து அணிகளையும் சேர்த்து 14 வது வீரராக தொடர்ந்து இரண்டு சதங்களை உலககோப்பை தொடரில் அடித்தவர் என்ற சாதனையும் படைத்தார். அதன் பின்னர் 106 ரன்களை எடுத்த போது பேர்ஸ்டோ போல்ட் பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்த நிலைத்து விளையாடிய ஜோ ரூட்டும் தன் பங்குக்கு ஒர் புதிய சாதனையை படைத்தார். இந்த உலகோப்பை தொடர் 500+ ரன்களை அடித்தன் முலமாக உலககோப்பை தொடரில் 500+ ரன்களை அடித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

Quick Links

App download animated image Get the free App now