ஓரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இங்கிலாந்து அணி வீரர்கள்

Pravin
ஜேன்னி பேஸ்ரோ
ஜேன்னி பேஸ்ரோ

அதன் பின்னர் இந்த 2019 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் இந்த சாதனையை நிகழ்த்தினர். அதற்கு அடுத்த படியாக இந்த இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ மற்றும் ஜெசன் ராய் இருவரும் நிகழ்த்தி உள்ளனர். அதை தொடர்ந்து விளையாடிய ஜெசன் ராய் தனது 17வது ஓடிஐ அரைசதத்தை அடித்த நிலையில் 60 ரன்னில் நீசம் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜேன்னி பேஸ்ரோ தொடர்ந்து தனது இரண்டாவது சதத்தை இந்த உலககோப்பை தொடரில் அடித்து அசத்தினார்.

ஜேன்னி பேர்ஸ் மற்றும் ராய்
ஜேன்னி பேர்ஸ் மற்றும் ராய்

இதற்கு முன்னர் நடைபெற்ற இந்தியா அணியுடனான போட்டியில் சதம் அடித்திருந்த ஜேன்னி பேர்ஸ்டோ இந்த போட்டியிலும் சதம் விளாசியதன் முலமாக தொடர்ந்து இரண்டு சதங்களை உலககோப்பை தொடர்களில் அடித்த முதல் இங்கிலாந்து அணி வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே போல் அனைத்து அணிகளையும் சேர்த்து 14 வது வீரராக தொடர்ந்து இரண்டு சதங்களை உலககோப்பை தொடரில் அடித்தவர் என்ற சாதனையும் படைத்தார். அதன் பின்னர் 106 ரன்களை எடுத்த போது பேர்ஸ்டோ போல்ட் பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்த நிலைத்து விளையாடிய ஜோ ரூட்டும் தன் பங்குக்கு ஒர் புதிய சாதனையை படைத்தார். இந்த உலகோப்பை தொடர் 500+ ரன்களை அடித்தன் முலமாக உலககோப்பை தொடரில் 500+ ரன்களை அடித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.

Quick Links