காயம் காரணமாக தொடரைவிட்டு வெளியேறும் முக்கிய ஆஸ்திரேலிய வீரர்?

Pravin
ஷான் மார்ஷ்
ஷான் மார்ஷ்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து சர்வதேச அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலககோப்பை தொடரில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் உள்ள முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா அணி 13 புள்ளிகளுடன் இரண்டாவது அணியாக உலககோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் முலம் இங்கிலாந்து அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில நான்காவது அணியாக அரையிறுதி போட்டிக்கு எந்த அணி தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே விளையாட உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முத்த வீரர் ஷான் மார்ஷ் இந்த உலககோப்பை தொடரின் ஆஸ்திரேலியா அணியில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

ஷிகர் தவண்
ஷிகர் தவண்

இந்த உலககோப்பை தொடரில் பெரும்பாலும் அனைத்து அணிகளுக்கும் பெரிய தலைவலியாக இருந்தது வீரர்கள் காயம் காரணமாக தொடரை விட்டு வெளிவருகின்றனர். அது அந்த அணிக்கு மிகவும் பெரிய பின்னடைவாக வந்து சேரும் நிலையில் இந்த உலககோப்பை தொடரில் முதன் முதலாக தென் ஆப்ரிக்கா அணியின் மூத்த வேகபந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் காயம் காரணமாக ஒரு உலககோப்பை போட்டியில் கூட பங்கேற்காத நிலையில் உலககோப்பை தொடரிலிருந்து விலகினார். அது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. அதன் காரணமாக தென் ஆப்ரிக்க அணி மிகவும் பலமான அணியாக பார்க்கப்பட்ட நிலையில் இந்த உலககோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது. அதே போல் தென் ஆப்ரிக்கா அணியின் லுங்கி இங்கிடியும் காயம் காரணமாக பல போட்டிகள் விளையாடமல் இருந்தார். அதே போன்று ஹஷிம் அம்லாவும் காயம் அடைந்தார்.

தென் ஆப்ரிக்கா அணியை போன்றே இந்தியா அணியிலும் ஷிகர் தவண் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடிய நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷிகர் தவண் சதம் விளாசினார். அதே போட்டியில் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகள் விளையாடமல் இருந்த நிலையில் பின்னர் உலககோப்பை தொடரில் இருந்தே விலகினார். ஷிகர் தவண் விலகியது இந்தியா அணிக்கு மிகவும் பெரிய பின்னடைவாக கருத்தப்பட்டது.

அதன் பின்னர் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்த நிலையில் இந்தியா அணியில் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் தொடர்ந்து இரண்டு போட்டிகள் விளையாடிய நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகினார்.தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் இடம் பெற்றார். அதே போன்று ஆப்கானிஸ்தான் அணியிலும் ஆலாம் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிரடியாக விளையாட கூடிய ஆன்ரே ரஸல் காலில் எற்பட்ட தசைபிடிப்பு காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகினார்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

அதே போன்று தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரர் ஷான் மார்ஷ் முன்கையில் ஏற்பட்ட பெரிய காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த உலககோப்பை தொடரில் அரையிறுதி போட்டி நேருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலியா வீரர் அணியில் இருந்து விலகுவது அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இந்த உலககோப்பை தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

ஷான் மார்ஷ்
ஷான் மார்ஷ்

இந்த உலககோப்பை தொடரில் ஷான் மார்ஷ் முதன் முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறக்கப்பட்டார். அதன் பின்னர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்னில் அவுட் ஆகிய நிலையில் அணியில் இடம் பெறாமல் இருந்த ஷான் மார்ஷ் தற்பொழுது உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி மட்டுமே உள்ள நிலையில் ஷான் மார்ஷ்க்கு பதிலாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

App download animated image Get the free App now