அதன் பின்னர் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்த நிலையில் இந்தியா அணியில் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் தொடர்ந்து இரண்டு போட்டிகள் விளையாடிய நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகினார்.தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் இடம் பெற்றார். அதே போன்று ஆப்கானிஸ்தான் அணியிலும் ஆலாம் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிரடியாக விளையாட கூடிய ஆன்ரே ரஸல் காலில் எற்பட்ட தசைபிடிப்பு காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகினார்.
அதே போன்று தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரர் ஷான் மார்ஷ் முன்கையில் ஏற்பட்ட பெரிய காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த உலககோப்பை தொடரில் அரையிறுதி போட்டி நேருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலியா வீரர் அணியில் இருந்து விலகுவது அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இந்த உலககோப்பை தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு சென்றுள்ளது.
இந்த உலககோப்பை தொடரில் ஷான் மார்ஷ் முதன் முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறக்கப்பட்டார். அதன் பின்னர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்னில் அவுட் ஆகிய நிலையில் அணியில் இடம் பெறாமல் இருந்த ஷான் மார்ஷ் தற்பொழுது உலககோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி மட்டுமே உள்ள நிலையில் ஷான் மார்ஷ்க்கு பதிலாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.