உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் பங்கேற்று விளையாடி வருகினறது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளது. இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது. இந்திய அணி உலககோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி உடன் தொடரை தொடங்கியது.
அதன் பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது உலககோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று நம்பிக்கை உடன் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவண் அதிரடி ஆட்டத்தாலும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சினாலும் இந்தியா அணி வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. 2015 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் இந்திய அணி அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை எற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி வரும் ஜூன் 13ம் தேதி வலுவான நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த உலககோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையான தொடக்க வீரர் ஷிகர் தவண் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கையில் எற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவண் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இருந்தார்.
அந்த போட்டியில் கையில் எற்பட்ட காயம் காரணமாக பீல்டிங் செய்யாமல் இருந்த நிலையில் ஷிகர் தவணை பரிசோதித்த மருத்தவர்கள் அடுத்த மூனறு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியதால் இந்திய அணியின் நட்சத்திர இடது கை பேட்மேன் ஷிகர் தவண் உலககோப்பை தொடரில் இருந்து விலகுகிறார். இது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஷிகர் தவண் என்றாலும் இந்திய அணியில் முதல் வரிசை வீரர்களில் இருக்கும் ஓரே இடது கை பேட்மேன் ஷிகர் தவண் மட்டும் தான் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் உலககோப்பை போட்டிகளில் ஷிகர் தவணுக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயஸ் ஐயர் இவர்களில் ஒருவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது. ஷிகர் தவண் உலககோப்பை தொடரின் இறுதியில் இந்திய அணியில் மீண்டும் இணைவார் என எதிரபார்க்கபடுகிறது. வரும் போட்டிகளில் இந்திய அணியில் தொடக்க வீரராக கே.எல். ராகுல் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.