ஐ.சி.சி வெளியிட்ட டாப்-5 ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர் யார் யார்...?

Pravin
ஐ.சி.சி டாப்-5 ப்ளேயர்ஸ்
ஐ.சி.சி டாப்-5 ப்ளேயர்ஸ்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் முதல் மூன்று வார லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இது வரை நடைபெற்றுள்ள 23 லீக் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் 7 புள்ளிகளுடன் உள்ளன. இந்த உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த உலககோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்தில் மழைகாலம் என்பதால் அனைத்து போட்டிகளும் மழை பாதிப்புடனே நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் முதல் மூன்று வார போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி தற்பொழுது இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை தொடரின் டாப் -5 ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ்-யை அறிவித்துள்ளது.

தற்பொழுது ஐ.சி.சி அறிவித்துள்ள ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ் வரிசையில் (டாப்-5) ஐந்து வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அவர்களின் விவரம் பின்வருமாறு:

#5.மிட்செல் ஸ்டார்க்

ஐ.சி.சி அறிவித்த ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ் வரிசையில் ஐந்தாவது இடத்தை ஆஸ்திரேலியா அணியின் மிச்செல் ஸ்டார்க் இடம் பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் ஐந்து போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 5/46 விக்கெட்களை வீத்தினார். ஐ.சி.சி ட்ரீம்11 பேண்டஸி பாய்ண்ட்-192

#4.ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ஐ.சி.சி அறிவித்த ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ் வரிசையில் நான்காவது இடத்தை இந்தியா அணியின் ரோஹித் சர்மா இடம் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா மூன்று போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசி உள்ளார். அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 140 ரன்கள் அடித்தார். ஐ.சி.சி ட்ரீம் 11 பேண்டஸி பாய்ண்ட்-200.5

#3. ஜோ ரூட்

ஜோ ரூட்
ஜோ ரூட்

ஐ.சி.சி ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ் வரிசையில் மூன்றாவது இடத்தை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பிடித்துள்ளார். ஜோ ரூட் நான்கு போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஜோ ரூட் ஐ.சி.சி அறிவித்த ட்ரீம் 11 பேண்டஸி பாய்ண்ட் -220

#2. ஆரோன் பின்ச்

ஆரோன் பின்ச்
ஆரோன் பின்ச்

ஐ.சி.சி ட்ரீம் 11 பேண்டஸி ப்ளேயர்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆரோன் பின்ச் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 343 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆரோன் பின்ச் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 153 ரன்களை விளாசினார். ஐ.சி.சி ட்ரீம் 11 பேண்டஸி பாய்ண்ட் – 246.5

#1. ஷகிப் அல் ஹசன்

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

ஐ.சி.சி அறிவித்த ட்ரீம் 11 பேண்டஸி பட்டியலில் வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்த உலககோப்பை தொடரில் இரண்டு முறை சதங்கள் விளாசிய நிலையில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 384 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஐ.சி.சி பேண்டஸி பாய்ண்ட் -298.5

Quick Links

App download animated image Get the free App now