உலககோப்பை தொடரில் இதுவரை யார் டாப்..?

Pravin
ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்பொழுது இங்கிலாந்தில் மழைகாலம் என்பதால் உலககோப்பை தொடரின் முக்கியமான போட்டிகள் மழையால் தடைபெற்று வருகின்றன.

இந்த 12வது உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலுவான நிலையில் விளையாடி வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் வழக்கத்திற்கு மாறாக இந்த உலககோப்பை தொடரில் சிறப்பான தொடக்கத்தை அமைக்கவில்லை. இந்த உலககோப்பை தொடரில் அனைத்து அணிகள் முதல் நான்கு போட்டிகளை விளையாடி உள்ளனர். இதுவரை இந்த உலககோப்பை தொடரின் 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் நான்கு போட்டிகள் மழையால் தடைபெற்று உள்ளது.

அணிகளின் வெற்றி விவரம்:

இ ந்த உலககோப்பை தொடரில் 22 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் அதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் நான்கு போட்டிகள் விளையாடியுள்ளன. அதில் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இரு அணிகளும் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. அடுத்த இடத்தில் இந்த உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் மழையால் தடைபெற்றுள்ள நிலையில் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளது. மேற்கு இந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் நான்கு போட்டிகள் விளையாடி ஒன்றில் மற்றும் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

பின்ச் மற்றும் வார்னர்
பின்ச் மற்றும் வார்னர்

உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த முதல் ஐந்து வீரர்கள்:

உ லககோப்பை தொடரில் முதல்பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் 22 போட்டிகளின் முடிவுகளின் படி இதுவரை 10 சதங்கள் இந்த உலககோப்பை தொடரில் அடிக்கப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து -4, இந்தியா-3, ஆஸ்திரேலியா-2, வங்கதேசம்-1, ஆகிய அணிகள் சதங்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 22 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பின்ச் 343 ரன்களுடன் முதல் இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா 319 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 281 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 279 ரன்களுடன் நான்காம் இடத்திலும், வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன் 260 ரன்களுடன் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

அதிக ஸ்ரைக் ரேட் வைத்துள்ள முதல் ஐந்து வீரர்கள்:

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

அதேபோல் இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் அதிக ஸ்ரைக் ரேட் உள்ள வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் கிளான் மேக்ஸ்வெல் 188.4 ஸ்ரைக் ரேட் உடன் முதல் இடத்திலும், இந்தியா அணி வீரர் ஹர்டிக் பாண்டியா 167.9 ஸ்ரைக் ரேட் உடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 148.4 ஸ்ரைக் ரேட் உடன் மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியின் நேதன் கூல்ட்டர்-நைல் 136.1 ஸ்ரைக் ரேட் உடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் 130.0 ஸ்ரைக் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

ஒருபோட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்கள்:

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அதே போல் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 22 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் 153 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலியா அணி கேப்டன் பின்சுடன் (153) முதல் இடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா 140 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 122* ரன்கள் அடித்து மூன்றாம் இடத்திலும் ரோஹித் சர்மா உள்ளார். ஐந்தாம் இடத்தில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 121 ரன்களுடன் உள்ளார்.

அதிகவிக்கெட்கள் வீழ்த்திய முதல் ஐந்து வீரர்கள்

முகமத் அமீர்
முகமத் அமீர்

அதே போல் இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் வெற்றி அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமத் அமீர் 13 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார்க் 13 விக்கெட்களுடனும், மூன்றாவது இடத்தில் மற்றோரு ஆஸ்திரேலியா அணி வீரர் கம்மின்ஸ் 11 விக்கெட்களும், இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 9 விக்கெட்களும், நியூசிலாந்து அணியின் பெர்குசன் 8 விக்கெட்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Quick Links