உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள நகரங்களில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த உலககோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுவரை இந்த உலககோப்பை தொடரில் 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி வார லீக் போட்டிகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற ஆறு அணிகளுக்குள் போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள், இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இந்த உலககோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த உலககோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி செல்ல முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி எற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்றாவது இடத்திற்கு போட்டி போடும் நிலையில் நான்காவது இடத்திற்கு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றது. இந்த நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே இடது கை தொடக்க ஆட்டகாரர் ஷிகர் தவண் காயம் காரணமாக இந்த உலககோப்பை தொடரில் இருந்து விலகினார். ஷிகர் தவண் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில் மற்றொரு இந்திய வீரர் காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியா அணி இந்த உலககோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்த முறை உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியா அணிக்கு உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியா அணி வீரர்கள் ஒவ்வொரு வீரராக காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியின் ஓரே இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்தியா அணியில் நான்காவது இடத்தில் விளையாட தேர்ந்தேடுக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுபாடு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா அணியில் நீண்ட காலமாக No.4 இடத்தில் யார் விளையாடுவது என்ற பிரச்சனை இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற தொடர்களில் அம்பத்தி ராய்டு விளையாடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதால் No.4 இடத்தை பிடித்தார் விஜய் சங்கர். இந்த உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண் இந்தியா அணி அறிவிக்கப்பட்ட போது விஜய் சங்கர் நான்காவது இடத்தில் விளையாடுவார் என கூறப்பட்டது.
இந்த உலககோப்பை தொடரில் ஷிகர் தவண் முதல் இரண்டு போட்டிகள் மட்டும் விளையாடிநார். அந்த இரண்டு போட்டிகளிலும் கே.எல் ராகுல் நான்காவது இடத்தில் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவண் காயம் ஏற்பட்டது. அடுத்த போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டகாரராகவும் விஜய் சங்கர் நான்காவது இடத்திலும் விளையாடினார்.
விஜய் சங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக களம் இறக்கப்பட்ட நிலையில் அந்த போட்டியில் விஜய் சங்கர் 15 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தார். அதே போட்டியில் பந்து வீச்சில் விஜய் சங்கர் விசிய முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அந்த போட்டியில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினார். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்களை மட்டுமே அடித்த விஜய் சங்கர் அந்த போட்டியில் பவுலிங் செய்யாத நிலையில் அடுத்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறாத விஜய் சங்கர். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களம் இறக்கப்பட்டார். இந்த நிலையில் விஜய் சங்கர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதால் விஜய் சங்கருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் அணியில் இடம் பிடித்துள்ளார்.